Home> Social
Advertisement

ஆனந்த் மஹிந்திராவின் Monday Motivation இதுதான். இண்டர்நெட்டில் வைரலான புகைப்படம்

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் Monday Motivation தான் இன்றைய இணைய உலகின் வைரல் டிவீட். 

ஆனந்த் மஹிந்திராவின் Monday Motivation இதுதான். இண்டர்நெட்டில் வைரலான புகைப்படம்

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் பக்கம் சுவாரஸ்யமான, அதே சமயம் சிந்திக்கத் தூண்டும் வீடியோக்களின் மொத்த இருப்பிடம். அந்த வரிசையில் நேற்று வனத்தில் அமர்ந்து படிக்கும் ஒரு சிறுமியின் படத்தை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை எடுத்தவரை பாராட்டியிருந்த ஆனந்த் மஹிந்திரா, இந்தப் பெண் தான் எனக்கு Monday Motivation என்று பதிவிட்டிருந்தார்.

அதாவது அவரது செயல் ஊக்கமளிக்கும் விதமாக இருப்பதாக மஹிந்திரா தெரிவித்திருந்தார். இந்த டிவிட்டை பலர் பாராட்டியிருந்தாலும் அவரை பின் தொடர்பவர்களுள் ஒருவர், உங்களது தகுதி என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு ஆனந்த் மஹிந்திரா அளித்த அற்புதமான பதில்தான் நேற்று இணைய உலகத்தை வென்றது. ஆனந்த மஹிந்திரா பகிர்ந்திருந்த அந்தப் பெண்ணின் படத்தை முதலில் முதலில் ட்விட்டரில்  ‘அபிஷேக் துபே’ பகிர்ந்திருந்தார். இது ஹிமாச்சல பிரதேசத்தில் கிளிக் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | குழந்தையை தண்ணீரில் விழாமல் பார்த்துக்கொள்ளும் நாயின் வீடியோ வைரல்!

"இன்று நான் ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்டான் பகுதியில் சுற்றுலா சென்றிருந்தேன், இந்த சிறுமி தனியாக அமர்ந்து குறிப்புகள் எழுதுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன், புத்தகங்களில் அவள் கொண்டிருந்த செறிவைக் கண்டு நான் வியப்படைந்தேன்" என்று அபிஷேக் பகிர்ந்து கொண்டார். அவரது அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட ஆனந்த் மஹிந்திரா, படத்தைப் பகிர்ந்துகொண்டு, "அழகான புகைப்படம், அபிஷேக். அவர் எனது #MondayMotivation" என்று எழுதினார்.

அந்தப் பதிவில் ஒருவர் உங்களது தகுதி என்ன என்று கேட்ட கேள்விக்கு, “வெளிப்படையாகவே சொல்கிறேன். எனது அனுபவம்தான் என்னுடைய தகுதி” என்று பதிவிட்டிருந்தார். இந்த டிவீட்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

மேலும் படிக்க | வண்ணத்துப்பூச்சியை துரத்தும் பென்குயின்கள்; இணையவாசிகளை கவர்ந்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More