Home> Social
Advertisement

Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... இலையை குடையாக்கிய கில்லாடி பறவைகள்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அந்த வகையில் இலையை குடையாக்கிய கில்லாடி பறவைகள்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

Viral Video: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... இலையை குடையாக்கிய கில்லாடி பறவைகள்!

அழகிய பறவைகள் மற்றும் விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.  காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. 

அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று அழகிய பறவைகள். இவை மிக அழகான வண்ணங்களையும் தோற்றங்களையும் கொண்டவை. இது மட்டுமின்றி இவை மிகவும் புத்திசாலித்தனமானவை என்பதை நிரூபிக்கும் வகையில், இலைகளை குடையாக பயன்படுத்திக் கொண்டு, மழையிலிருந்து, வெயிலில் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் அந்த சின்னஞ்சிறிய பறவைகள், நம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், சின்னஞ்சிறிய பறவை ஒன்று தனது அலகின் இலையை ஸ்டைலாக பிடித்துக் கொண்டு குடை போல் தன்னை வெயிலில் இருந்தும், மழையில் இருந்து காத்துக் கொள்வதைக் காணலாம் இது பார்ப்பவரை நிச்சயம்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். சின்னஞ்சிறிய பறவையின் மூளை இத்தனை வேலை செய்கிறதா என நினைக்கத் தான் தோன்றுகிறது.

காணக்கிடைக்காத அதிசய வீடியோவை இங்கே காணலாம்:

 

 

சில நாட்களுக்கு முன் இதே போல வைரலான நாய் வீடியோவில், நாய் ஒன்று பூனைக்குட்டியின் எதிரே உள்ளதை காண்லாம். இரண்டு செல்ல பிராணிகள் என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதில் நாய்க்கும் பூனை குட்டிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் மிகவும் சுவாரஸ்யமானது. முதலில் இரண்டு இடையே ஏதோ மோதல் வெடித்த நிலையில், நாயும் பூனையும் கட்டிப் புரளுகின்றன. ஆனால், நாய் என்ன நினைத்ததோ, உடனை தன்னை விடுவித்துக் கொண்டு, மிக வேகமாக சுழலுகிறது. அதனை பார்த்த பூனை புரியாமல் குழம்புகிறது. சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய் குட்டி - பூனைக்குட்டி வீடியோவைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... சண்டையிட்ட பூனைக்குட்டியை குழப்பிய நாய் 

இந்த வீடியோவைப் போல் மயிலின் காதல் உணர்வை விவரிக்கும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வைரலானது. மயிலின் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கும். பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். அந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | Viral Video: ஆண் மயிலின் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!

சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதில் சில வீடியோக்கள் மட்டுமே மிகவும்வைரல் ஆகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யத்தை கொடுப்பதாகவும், சில வேடிக்கையானதகாவும், சில அதிர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கும். எனினும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை போக்கக் கூடிய அழகிய வீடியோக்கள் ரசிகரிகளை பெரிதும் ஈர்க்கின்றன என்றால் மிகையிலை.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More