Home> Social
Advertisement

Viral Video: தண்ணீருக்குள் சீறிப்பாயும் கழுகு... நொடியில் நடத்திய மீன் வேட்டை...!

Eagle Hunt Video: கூர்மையான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் கொண்ட பறவையான கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அதைப் பிடிக்க நினைத்து விட்டால், கவனத்தை திசை திருப்பாது, அதனை பிடித்து இரையாக்கும் திறன் கொண்டது.

Viral Video: தண்ணீருக்குள் சீறிப்பாயும் கழுகு... நொடியில் நடத்திய மீன் வேட்டை...!

கழுகு ஓர் அற்புதமான பறவை. கூர்மையான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் கொண்ட பறவையான கழுகு தனியாக தான் உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்காது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது. கழுகால் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பொருட்களை கூட தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அதைப் பிடிக்க நினைத்து விட்டால், கவனத்தை திசை திருப்பாது, அதனை பிடித்து இரையாக்கும் திறன் கொண்டது. உலகில் அதிக அளவில் எடை தூக்ககூடிய பறவைகளில் முதலிடம் வகிப்பது கழுகு. அதிலும் குறிப்பாக 'மார்ஷியல் கழுகு' வகைகள் தன் உடலை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக் கொண்டு பறக்க கூடியது. இது மலை ஆடுகளை கூட தூக்கி செல்லும் திறன் பெற்றது.

வைரலாகி வரும் வீடியோ கழுகின் வேட்டை வீடியோ

அந்த வகையில் கழுகின் வேட்டைத் திறனை எடுத்துரைக்கும் வகையில், வீடியோ ஒன்று வைரலாகி (Viral Video) வருகிறது. வைரலாகி வரும் வீடியோவில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மீனை வேட்டையாடுவதைக் காணலாம். தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டு வானத்தில் பறக்கும் அந்த கழுகு, நடு வானிலேயே அதனை தின்கிறது. மீன் உயிருடன் இருக்கும்போதே அதனை தின்கிறதோ என நினைக்கும் அளவிற்கு, மீனை பிடித்த உடனேயே, மேலே பறந்து கோண்டே அதனை ருசிக்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றல் பலரை ஆச்சர்யத்தில் அழ்த்தியுள்ளது. மனிதனை விட 10 மடங்கு வலிமையான பிடி திறனுடன் கூர்மையான கண்களையும் கொண்ட கழுகுகள் எந்த விலங்கையும் வீழ்த்தும் திறன் பெற்றது.

வைரலாகும் கழுகின் வேட்டை வீடியோவை கீழே காணலாம்:


துப்பாக்கியின் குண்டைப் போன்று, கழுகு தண்ணீருக்குள் பாய்ந்து மீனை பிடித்த திறனையும், பிடித்த மீனை நடுவானிலே ருசி பார்த்த திறனையும் பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நீரில் அது பாய்ந்த வேகமும், அதே வேகத்தில் மீனை உயிருடன் ருசித்த திறனையும் காட்டும் இந்த வீடியோ மிகவும் வைரலாகியது. உலகில் சுமார் 60 வகையான கழுகு இனங்கள் உள்ளன. கழுகின் பார்வை மனிதனை விட நான்கைந்து மடங்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. இதனால் புற ஊதா கதிர்களையும் கூட காண முடியும். அதனால் தான் நிலத்தில் உள்ள விலங்குகள் மட்டுமல்ல, நீரில் இருக்கும் விலங்குகளையும் வேட்டையாடுகிறது கழுகு

 வல்லவன் வாழ்வான் என்ற விதி

இணைய உலகில் காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை, காட்சிகளை கண்டு களிக்கலாம். வல்லவன் வாழ்வான் என்ற விதி விலங்குகள் வாழ்க்கையில் நன்றாக பொருந்தக் கூடியது. வலிமை கொண்ட உயிரினங்கள், பலவீனமான விலங்குகளை தின்று வாழ்கின்றன. உயிருக்கான போராட்டங்கள் அடங்கியது தான் விலங்குகள் வாழ்க்கை. விலங்குகள் உலகம் நமக்கு புரியாத பல புதிர்களைக் கொண்டுள்ளன.

மேலும் படிக்க | Viral Video: யூ டர்ன் எடுக்கிற இடமா இது.... ஆனாலும் ட்ரைவருக்கு ஒரு சல்யூட்...!!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

Read More