Home> Lifestyle
Advertisement

ஆனது நிச்சயதார்த்தம்! குடும்பத்துடன் முதல் விசிட் இங்குதான்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். 

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்களும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் டிசம்பர் மாதத்தில் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் புதிதாக திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ள ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா குடும்பத்துடன் சித்திவிநாயக் கோவில் சென்றுள்ளார். 

Read More