Home> Social
Advertisement

விஜய் பிறந்தநாள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு!!

தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடும் இளைய தளபதி விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளனர்!

விஜய் பிறந்தநாள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியீடு!!

தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் திகழ்பவர் நடிகர் விஜய். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவர் நடிப்பில் உருவான எராளமான திரைப்படங்கள் இவருக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்தது. இன்று வரை மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்ட்டுள்ளார். 

இவர் நடிகர் மட்டுமின்றி எராளமான திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கு, (1998) ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை (1998) மற்றும் திருப்பாச்சி (2005) ஆகிய திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான விருதினை வாங்கி தந்தது. இதையடுத்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டுள்ள விஜய் பிறந்தநாளானது ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றானர். 

இந்நிலையில், தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடும் இளைய தளபதி விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோவானது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Read More