Home> Social
Advertisement

சாக்லேட் தொழிற்சாலையில் இரண்டு கிலோ சாக்லேட்டை ருசி பார்த்து சென்ற கரடி

நீலகிரியில் சாக்லெட் தொழிற்சாலையில் புகுந்த கரடி சாக்லேட்டை ருசி பார்த்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.   

சாக்லேட் தொழிற்சாலையில் இரண்டு கிலோ சாக்லேட்டை ருசி பார்த்து சென்ற கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் கரடிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அவை குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு மற்றும் கோவில்களில் உள்ள விளக்குகளில் ஊற்றும் எண்ணெய் குடிக்கவும் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தொழிற்சாலை மற்றும் கடைகளிலும் நுழைந்து உணவுப் பொருட்களை தேடுகின்றன. அந்தவகையில் அண்மையில் சாக்லெட் தொழிற்சாலைக்குள் கரடி புகுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

குன்னூர் பகுதியில் இருக்கும் ஹைபீல்டு சாக்லேட் தொழிற்சாலைக்குள் இரவுநேரத்தில் செல்லும் கரடி, அங்கிருந்த நுழைவு வாயிலில் ஏறி குதித்து பேக்டரிக்குள் செல்கிறது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அங்கிருந்த சாக்லேட்களை  ருசி பார்த்துள்ளது. சுமார் 2 கிலோ சாக்லேட்டை உணவாக உண்டு பின்னர் அங்கிருந்து சென்றுள்ளது‌. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியை கொண்டு வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை: நீதிபதிகள்

இதுமட்டுமில்லாமல் அண்மையில் குன்னூர் நகரப் பகுதிகளில் கரடி உலாவிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில் நகரின் பல்வேறு வீதிகளில் சென்ற கரடி, கடை ஒன்றின் கதவை திறக்க முட்டி மோதியது. அது முடியாததால் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது. யானை மற்றும் புலி, சிறுத்தையின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகமாக இருப்பதாக மக்கள் அச்சப்பட்டு வந்த நிலையில், தற்போது கரடியின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்களுக்கு இரட்டிப்பு பயத்தை உண்டாக்கியுள்ளது. வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வராமல் இருக்கவும், அதனை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More