Home> Social
Advertisement

Bizarre News: பெப்சிக்கு அடிமையாகி 20 ஆண்டுகளாக தினம் 9 லிட்டர் குடித்து வந்த நபர்

ஹிப்னோதெரபிஸ்ட் ஆன்லைன் வாயிலாக அளித்த சிகிச்சைக்கு பிறகு, கியூரி குணமடைந்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தண்ணீர் குடித்தார்.

Bizarre News: பெப்சிக்கு அடிமையாகி 20 ஆண்டுகளாக தினம் 9 லிட்டர் குடித்து வந்த நபர்

இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடித் தொழிலாளி, 20 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 கேன்கள் பெப்சியைப் பருகி வந்திருக்கிறார் என்று கேட்டால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.... 

நியூஸ் வீக்கில் வெளியான செய்தியில், 41 வயதான ஆண்டி க்யூரி தினமும் காலையில் எழுந்தது ஒரு லிட்டர் பெப்ஸி பானத்தை குடித்து விடுவார். அதோடு ஒரு நாளைக்கு ஒன்பது லிட்டர் குடித்து வந்தார். அவர் தனது 20 வயதில் பெப்ஸிக்கு அடிமை ஆன காரணத்தினால், இது வரை அவர் 219,000 கேன்கள் பெப்சியைப் பருகியுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 8,000 கிலோ சர்க்கரைக்கு சமம்.

இது குறித்து க்யூரி கூறுகையில், “குளிர்ச்சியான பெப்சியின் சுவை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதற்கு ஈடு இணை இல்லை. நான் இரவுகளில் வேலை செய்கிறேன், அதனால் இடை இடையில் குடிக்க, நான் தினமும் நான்கு அல்லது ஐந்து என்ற அளவில் இரண்டு லிட்டர் பெப்சி பாட்டில்களை எடுத்துச் செல்வேன்” என்றார்.

"நான் டெஸ்கோவில் பணிபுரிவதால், வேலை முடிந்த உடனேயே அதை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

41 வயதான அவர் பெப்ஸி பானத்திற்காக தினமும் $25 செலவழித்து வந்தார். இது வருடத்திற்கு சுமார் $8,500 ஆகும். அவர் தனக்குப் பிடித்த குளிர்பானத்திற்காக செலவழித்த "பணத்தில்" ஒவ்வொரு வருடமும் ஒரு காரை வாங்கியிருக்கலாம் என்று அவரே ஒப்புக்கொண்டார். "எனக்கு அது தேவைப்பட்டது. நான் காலை எழுந்தவுடன் பிரிட்ஜில் இருந்து எடுத்து ஒரு பெரிய கிளாஸ் பெப்சியை நானே ஊற்றிக்கொண்டு குடிப்பேன். அதோடு நாள் முழுவதும் குடிக்க, என்னுடன் எடுத்துச் செல்வேன்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | ஆனந்த் மஹிந்திராவைக் கவர்ந்த டிஸ்கோ ஸ்கூட்டர்… லைக்குகளை அள்ளிக் குவிக்கும் வீடியோ

க்யூரி தனது எடை 266 பவுண்டுகளாக உயர்ந்த பிறகு கடுமையான நடவடிக்கை தேவை என்று முடிவு செய்தார். மேலும் அவர் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம், அவர் 28 பவுண்டுகளை குறைக்க முடிந்தது. ஆனால் அவரால் பெப்சி குடிப்பதை நிறுத்த முடியவில்லை.

பின்னர், லண்டனைச் சேர்ந்த சிகிச்சையாளரும் ஹிப்னாடிஸ்டுமான டேவிட் கில்முரியைத் தொடர்பு கொண்டதாகக் க்யூரி கூறினார், அவர் க்யூரிக்கு தவிர்க்கக்கூடிய உணவு உட்கொள்ளும் கோளாறு ( Avoidant Restrictive Food Intake Disorder - ARFID) இருப்பதைக் கண்டறிந்தார். ஆச்சரியப்படும் விதமாக, சிகிச்சையில், ஒரு ஆன்லைன் அமர்வுக்குப் பிறகு, திரு கியூரி இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக குணமடைந்து தண்ணீர் குடித்தார். நான்கு வாரங்களில், அவர் மேலும் 14 பவுண்டுகளை குறைத்தார். நியூஸ் வீக் வெளியிட்டுள்ள செய்தியில், குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

 கியூரி இது குறித்து கூறுகையில், “நான் ஒரு மாதமாக பெப்சி கேன்களை தொடவில்லை; எனக்கு இப்போது தண்ணீர் பிடித்திருக்கிறது. என் மனைவி சாரா, என் சருமம் நன்றாக இருப்பதாகவும், எனக்கு அதிக ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

திரு டேவிட், மறுபுறம், 41 வயதான அவர் இவ்வளவு சோடா குடித்ததால் தான் "திகிலடைந்ததாக" கூறினார். "இதுவரை நான் கேள்விப்பட்டதிலேயே மிக மோசமான சர்க்கரைப் பழக்கம் இதுவாகும்," என்று அவர் மேலும் கூறினார். ஹிப்னாடிஸ்டு மேலும் கூறுகையில், இந்த வகையான போதை "மிகவும் ஆபத்தானது" என்றும், இது ஒரு நபரின் முக்கிய உறுப்புகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் விளக்கினார்.

மேலும் படிக்க | Viral News: இந்த நாட்டில் தங்கத்தை விட ஆணுறையின் விலை அதிகம்; விலை ரூ.60,000 மட்டுமே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More