Home> Science
Advertisement

குறைவான விலையில் 3 GB டேட்டா+Hotstar கொடுக்கும் ஜியோ..!

ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சனை இலவசமாக கொடுக்கும் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?  

குறைவான விலையில் 3 GB டேட்டா+Hotstar கொடுக்கும் ஜியோ..!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நாள் ஒன்றுக்கு 1 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் 3 ஜிபி டேட்டா உள்ள சில திட்டங்கள் பிரபலமாக உள்ளன. வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு உதவும் இந்த திட்டம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 

ஜியோ ரூ.419 திட்டம்

419 ரூபாய் கொண்ட இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், நீங்கள் தினமும் 3 ஜிபி இணையத்தைப் பெறுவீர்கள், அதாவது வேலிடிட்டி முடியும் வரை மொத்தமாக நீங்கள் இந்த திட்டத்தில் 84 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் நீங்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பு, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை அனுப்பிக் கொள்ள முடியும். 

மேலும் படிக்க | Excitel வழங்கும் பிரமாண்டமான திட்டங்கள்; தினறும் Jio-Airtel-BSNL

ஜியோ ரூ.601 திட்டம்

இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா வழங்கும் இந்த திட்டத்தில், கூடுதலாக 6 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். 601 ரூபாய் விலையில் இருக்கும் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் அனுப்பிக் கொள்ளலாம். இவை தவிர டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவும் உங்களுக்கு கிடைக்கும்.   

மேலும் படிக்க | Jio-Airtel-Vi-க்கு தலைவலியை கொடுக்கும் மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டம்!

ஜியோ ரூ 1199 திட்டம்

முந்தைய இரண்டு திட்டங்களைக் காட்டிலும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ஜியோவின் 1199 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம், அன்லிமிட்டெட் அழைப்பு மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பெறுவீர்கள். இவை தவிர இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கிளவுட், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தாக்களும் கிடைக்கும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More