Home> Science
Advertisement

பூமியில் உயிர்கள் தோன்றியதற்கும் மின்னலுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!

400 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தாதுக்களை உருவாக்குவதில் மின்னலின் பங்களிப்பு மிகக் குறைவு என்று புவியியலாளர்கள் நம்பினர். 

பூமியில் உயிர்கள் தோன்றியதற்கும் மின்னலுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!

பல விஞ்ஞானிகள் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கு விண்கற்கள் தான் மிக முக்கியமான காரணம் என்று கருதுகின்றனர். ஆனால் விண்கற்களை போலவே வானத்திலிருந்து விழும் மின்னலின் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று சமீபத்திய புவியியலாளர்களின் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

400 கோடி  ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் தாதுக்களை உருவாக்குவதில் மின்னலின் பங்களிப்பு மிகக் குறைவு என்று புவியியலாளர்கள் நம்பினர். ஆனால் லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இப்போது இதற்கு முற்றிலும் மாறாக, மின்னலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறியுள்ளனர்.

விண்கற்கள் (Meteors) போலவே மின்னலும் (Lightening)  மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், இது உயிர்கள் உருவாக தேவையான கூறுகளை உருவாக்கியது. பூமி போன்ற பிற கிரகங்களில் இதுபோன்று, உயிர்கள் உருவாகத் தொடங்கலாம் என இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது.

ALSO READ | செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பூமி (Earth) மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுன் பெஞ்சமின் ஹேய்ஸ் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார். ஆராய்ச்சியாளர்கள், பூமியில் மின்னல் விழுந்ததால் தோன்றிய  ஒரு பெரிய பாறையை ஆராய்ச்சி செய்தனர். மின்னல் மூலம் தோன்றிய பாறை ஃபுல்குரைட் என்று அழைக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள க்ளென் எலின் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்னல் தாக்கியதன் மூலம் ஃபுல்குரைட் உருவாக்கியது. இது அருகிலுள்ள உய்ட்டன் கல்லூரியின் புவியியல் துறைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ட்ரைபார்சைட் எனப்படும் பாஸ்பரஸ் தாதுக்கள் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டன. உயிர்கள் உருவாகுதல் மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல செயல்முறைகளுக்கு பாஸ்பரஸ் மிகவும் முக்கியமானது.

350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மின்னல் தாக்கியதால் உருவான பாஸ்பரஸ் விண்கற்களிலிருந்து வரும் பாஸ்பரஸை விட மிக அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எனவே, பூமியில் உயிர்கள்  தோன்றியதற்கு மின்னல் மிகவும் முக்கியமாக இருந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More