Home> Science
Advertisement

வியாழன், சனி கோள்களின் ‘Great Conjunction’-ஐ தன் பாணியில் கொண்டாடும் Google Doodle

கிரேட் கான்ஜங்க்ஷனையும், விண்டர் சால்ஸ்டிசையும் பனி மூடிய பூமி இரு கோள்களையும் பார்ப்பதையும் Goodle Doodle அழகாகக் காட்டியுள்ளது.

வியாழன், சனி கோள்களின் ‘Great Conjunction’-ஐ தன் பாணியில் கொண்டாடும் Google Doodle

ஒரு மிக அரிய வானியல் நிகழ்வை உலகமே இன்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. Google Doodle-லும் தன்னுடைய பாணியில் இந்த நிகழ்வைக் கொண்டாடியது. 2020-ன் விண்டர் சோல்ஸ்டைசான (Winter Solstice) இன்று இரவின் நீளம் மிக அதிகமாகவும் நாளின் நீளம் மிகக் குறைவாகவும் இருக்கும். பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனிடமிருந்து அதிகபட்ச சாய்வைக் கொண்டிருக்கும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

இந்த ஆண்டின் Winter Solstice மற்றொரு சிறப்பு வானியல் நிகழ்வுடன் ஒத்துப்போகிறது. நமது சூரிய மண்டலத்தின் இரண்டு பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி ஆகியவற்றின் ‘Great Conjunction’ அதாவது ‘பெரிய இணைவு’ இன்று ஏற்படவுள்ளது.

டிசம்பர் 21 ஆம் தேதி, வியாழனும் சனியும் இரவு வானத்தில் ஒன்றிணைந்து காணப்படும். 17 ஆம் நூற்றாண்டில் கலிலியோவின் காலத்திற்குப் பிறகு இந்த இரு கோள்களும் ஒன்றுக்கொன்று இத்தனை நெருக்கமாகக் காணப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இந்தியாவில் எப்போது தெரியும்?

இந்தியாவில் (India), இந்த வானியல் நிகழ்வு மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை தெரியும்.

நமது சூரிய மண்டலத்தில் (Solar System) வியாழனுக்கும் சனிக்கும் இடையிலான இணைப்புகள் குறிப்பாக அரிதானவை அல்ல என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். வியாழன் தனது அண்டை கோளான சனியை தனது சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றுகையில், ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் ஒரு முறை கடந்து செல்கிறது.

ALSO READ: இன்று ‘Christmas Star’-ஆக காட்சியளிக்கும் சனி-வியாழன் சேர்க்கை: காணத் தவறாதீர்கள்

ஆனால் 2020-ல் நடக்கும் இந்த நிகழ்வு மிகவும் நெருக்கமான விதத்தில் நடைபெறும். வியாழன் (Jupiter) மற்றும் சனி ஆகியவை நமது கண்ணோட்டத்தில் பத்தில் ஒரு பங்கு இடைவெளியைத் தான் கொண்டிருக்கும். அல்லது ஒரு முழு நிலவின் அகலத்தில் ஐந்தில் ஒரு பங்காகத்தான் இவற்றின் இடையிலான இடைவெளி இருக்கும்.  சூரிய அஸ்தமனம் ஆன பிறகு, வானிலை நன்றாக இருந்தால், இந்த நிகழ்வை நாம் பூமியிலிருந்து காணலாம்.  

மேலும் கிறிஸ்துமஸ் (Christmas) நெருங்கும் இந்த வேளையில் தோன்றும் இந்த நிகழ்வு இதுவரையிலான மிகப்பெரிய ‘கிரேட் கன்ஜங்க்ஷனாக’ கருதப்படுகின்றது.

ஜூலை 1623 முதல் இரு கிரகங்களும் மிக அருகில் காணப்பட்டன. அதன் பிறகு இவ்விரு கிரகங்களும் இத்தனை நெருக்கமாக தோன்றும் நிகழ்வு இன்றுதான் நிகழவுள்ளது. ஆனால், அப்போது சூரியனுடன் நெருக்கமாக இருந்ததால், இந்த நிகழ்வைப் பார்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது.

அனிமேஷன் செய்யப்பட்ட Google Doodle

அனிமேஷன் செய்யப்பட்ட கூகிள் டூடுல் இந்த நிகழ்வை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. கிரேட் கான்ஜங்க்ஷனையும், விண்டர் சால்ஸ்டிசையும் பனி மூடிய பூமி இரு கோள்களையும் பார்ப்பதையும் Goodle Doodle அழகாகக் காட்டியுள்ளது.

வியாழன் மற்றும் சனியின் "கிரேட் கான்ஜங்க்ஷன்" நிகழ்வு "2020 இன் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்" என்றும் குறிப்பிடப்படுகிறது.

“இந்த இரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இத்தனை அருகில் கடந்து செல்லும் நிகழ்வு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு இரவில், அனைவருக்கும் தெரியும் வகையில் நடந்து சுமார் 800 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று NASA கூறுகிறது.

ALSO READ: இந்த மாதம் 6 நாட்களுக்கு உலகம் இருளில் மூழ்கவுள்ளதா? NASA என்ன கூறுகிறது?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More