Home> Science
Advertisement

பிரபலமான பான பொருட்களிலிருந்து “living materials” உருவாக்கலாம் தெரியுமா?

"கொம்புச்சா தாய்" (“Kombucha mother”), பூஞ்சையை (fungus) பானங்களில் பயன்படுத்துவதை விட வேறு பல விதங்களிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பிரபலமான பான பொருட்களிலிருந்து “living materials” உருவாக்கலாம் தெரியுமா?

அண்மையில் கொம்புச்சா (kombucha) பிரபலமான தேநீர் பானத்தின் பொருட்கள் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களின் ஒரு கூட்டு பொருளை பயன்படுத்தி புளிக்கவைக்கப்பட்டன.

"கொம்புச்சா தாய்" (“Kombucha mother”), பூஞ்சையை (fungus) பானங்களில் பயன்படுத்துவதை விட வேறு பல விதங்களிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூஞ்சையின் உள்ளடக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள்   வாழ்க்கைப் பொருட்களை (engineered living materials (ELMs)) விஞ்ஞானிகள் உருவாக்கினர். இத்தகைய பொருட்கள் எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, ஒளியை உணர்தல் மற்றும் அசுத்தங்களைக் கண்டறிதல் உட்பட பல முக்கியமான துறைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகின்றன.

நமது சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தப் பணித்திட்டம் 2014 MIT திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது, இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் “எஸ்கெரிச்சியா கோலி”( “Escherichia coli”) செல்களை வடிவமைத்து உயிரற்ற கூறுகளைக் கொண்ட பயோ ஃபிலிம்களை (biofilms) உருவாக்கினர்.


ஆனால் அந்த விஷயத்தில் புதிய பொருட்களுக்கு இந்த புதிய கொம்புச்சா திட்டத்தைப் போல வேறு எந்த நடைமுறை நோக்கங்களும் இல்லை. விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை மிகப் பெரிய தளத்திற்கு கொண்டு செல்ல விரும்பினர், அதனால்தான் அவர்கள் கொம்புச்சா-வை (kombucha) அல்லது அதன் மூல கலாச்சாரத்தை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்கள் ELM களை எவ்வாறு உருவாக்கினார்கள்? சாக்கரோமைசஸ் செரிவிசியா (Saccharomyces cerevisiae) எனப்படும் ஆய்வக yeast ஒன்று உண்டு. ஆராய்ச்சியாளர்கள் அதை உருமாற்றி, கோமகாடெயிபாக்டர் ரைட்டிகஸ் (Komagataeibacter rhaeticus) என்ற பாக்டீரியத்துடன் இணைத்தனர். ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் சரியான விகிதத்தில் இணைப்பது எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் இறுதியில் அதைக் கண்டுபிடித்து ELM-ஐ கொண்டு வந்தார்கள், அவை Syn-SCOBY என்று அழைக்கப்படுகின்றன.

மாசுபடுத்திகளில் உள்ள ரசாயனங்களை உணருவது அல்லது நீல ஒளியின் முன்னிலையில் ஒளிரும் திறன் கொண்ட ஒரு புரதத்தை உருவாக்குவது போன்ற பல செயல்பாடுகளை பாக்டீரியா செய்ய முடியும் என்று ScienceAlert சஞ்சிகை கூறுகிறது. இந்த ஆய்வு நேச்சர் மெட்டீரியல் (Nature Materials) என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ | Sex Crimes: 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற மதத்தலைவர் யார் தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More