Home> Science
Advertisement

பூமியில் தரையிறங்க தயாராகும் ஏலியன்கள்! உண்மையா? பொய்யா? Fact Check

Aliens On Earth Soon: திடீரென்று இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்? வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? பல கேள்விகளுக்கு Fact Check மூலம் விடை. 

பூமியில் தரையிறங்க தயாராகும் ஏலியன்கள்! உண்மையா? பொய்யா?  Fact Check

Fact Check Aliens: நாளுக்கு நாள் அறிவியலில் நாம் முன்னேறிக்கொண்டு சென்றாலும், ஏலியன்கள் என கூறப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் இன்னும் நம் மனதில் நிலவி வருகிறது. ஏலியன்ஸ் எப்படி இருக்கும், அவர்கள் எப்படி பட்டவர்கள், அவர்களால் மனிதகுலத்திற்கு ஆபத்தா, வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்களா, உண்மையிலும் ஏலியன்ஸ் இருக்கிறதா உட்பட பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ஏலியன்களுக்கும் பூமிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா அல்லது சூரிய குடும்பத்தில் வேறு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதைக் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஏலியன்கள் குறித்து வெளியாகும் செய்திகள் "ஏலியன்கள்" மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. சமீபநாட்களாக ஏலியன்ஸ் பற்றி மீண்டும் மக்கள் பேசத்தொடங்கியுள்ளன. அதற்கு காரணம் "பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வருவார்கள்" எனக் கூறப்படுவதுதான். ஆம், தற்போது இதுக்குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது? என்பதைக் குறித்து Fact Check மூலம் சரிபார்த்தோம். அதன்மூலம் நமக்கு என்ன உண்மை கிடைத்தது என்பதை உங்களுக்கு சொல்கிறோம். 

இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

காலம்காலம்காலமாக வேற்றுகிரகவாசிகளால் உலகிற்கு அச்சுறுத்தல் என்று கூறப்பட்டு வருகிறது. அதேபோல வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விண்வெளி கொள்கையும் கூறுகிறது. பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வரலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு மற்றும் அவர்கள் பூமிக்கு வருவது பேரழிவு தரும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல கூற்றுக்கள் மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி வருகிறது. உண்மையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்று அடிப்படையில் ஒரு கேள்வி எழுகிறது அல்லவா..? இதுவரை திரைப்படங்களில் காட்டப்படும் ஏலியன்களை தவிர வேறு எங்கும் ஏலியன்களை நேரடியாக யாரும் பார்த்ததில்லை. ஆனால் தொடர்ந்து இந்த ஏலியன்கள் குறித்து பேசி வருகிறோம். திடீரென்று இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்? இப்படி பல கேள்விகள் இருந்ததால், உண்மையை அறிந்துக்கொள்ள அதைப்பற்றி விசாரிக்க முயற்சி செய்தோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் என்ன என்று பார்ப்போம்.

மேலும் படிக்க: Aliens: வேற்றுகிரகவாசிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

ஏலியன்கள் இருக்கிறார்களா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன? 

விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை. பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலத்தில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வருகிறது. இந்த சமிக்ஞைகள் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து வருகிறதா? அல்லது வேற இடத்தில் இருந்து சமிக்ஞைகள் வருகிறதா? என்ற கோணத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ரேடியோ சிக்னல்கள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பான எந்தவிதமான ஆதாரங்களு கிடைக்கவில்லை. வேற்றுகிரகவாசிகள் பூமியில் இறங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேற்றுகிரகவாசிகள் இருந்ததற்கான ஆதாரம் எங்கும் இல்லை. ஆராய்ச்சி நடந்து வருகிறது. அப்படி இருந்தும் வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுக்கு ஆபத்தானவர்கள் என்று கூறுவது அர்த்தமற்றது அப்படி சொல்ல முடியாது. எனவே இதுபோன்ற கூற்றுகளை நம்ப வேண்டாம் என நம்பிக்கை தருகின்றனர் விஞ்ஞானிகள். எனவே ஏலியன்கள் குறித்து எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை.

மேலும் படிக்க: Europaவில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொடுக்கும் ஆச்சரியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More