Home> Puducherry
Advertisement

Puducherry: தமிழிசையின் எண்ட்ரி, காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு காட்டுகிறதா?

புதுச்சேரியின் புதிய கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பெற்றுக் கொண்ட பிறகு புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு சனிக்கிழமையன்று வருகை தருகிறார்

Puducherry: தமிழிசையின் எண்ட்ரி, காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு காட்டுகிறதா?

புதுச்சேரி: புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காரைக்காலுக்கு செல்கிறார்.

புதுச்சேரியின் புதிய கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பெற்றுக் கொண்ட பிறகு புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு சனிக்கிழமையன்று வருகை தருகிறார். காலை சுமார் பத்தரை மணியளவில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று, கொரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்வதுடன், மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தவிருக்கிறார். அங்கிருந்து திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார் என்று தெரிகிறது.  

இந்நிலையில், புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் குற்றம்சாட்டி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

Also Read | புதுவை கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

தங்களது அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாக நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 11இல் இருந்து தற்போது 10ஆக குறைந்துவிட்டது.  

Also Read | PM மோடியை தொடர்ந்து தமிழகம் வரும் அமித்ஷா; வருகையின் நோக்கம் என்ன?

எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4 மற்றும் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட 14 எண்ணிக்கையை கொண்டுள்ளது. எனவே,  நாராயணசாமி தலைமையிலான ஆட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More