Home> Puducherry
Advertisement

'ப்ளூ வேல் சேலஞ்ச்' கேம்: புதுச்சேரி மாணவர் தற்கொலை!!

'ப்ளூ வேல் சேலஞ்ச்' கேம்: புதுச்சேரி மாணவர் தற்கொலை!!

கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று இந்த விளையாடிற்கு முற்று உள்ளி வைக்க 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த, 22 வயது இளைஞர் உருவாக்கிய இந்த 'ஆன்லைன்' விளையாட்டு ப்ளூ வேல் சேலஞ்ச். இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களுக்கு 50 நாட்களுக்கு பல்வேறு சவால்கள் தரப்படும். கடைசி சவால் தற்கொலை செய்து கொள்வது. ரஷ்யா, ஜப்பானில் அதிகமானோர் விளையாடி வரும் இந்த விளையாட்டு, நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு பயின்று வந்த, மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது கையில் ப்ளூ வேல் குறியீடு இடம்பெற்றிருந்தது.

தற்போது புதுச்சேரி பல்கலைகழகத்தில் படித்து வந்த, அசாமை சேர்ந்த சசிகுமார் 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' கேம் விளையாடிதால் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More