PHOTOS

ஆரோக்கியமான அழகுக்கு உத்தரவாதம் அளிக்கும் பூ எது? பட்டிமன்றத்தில் ஜெயிப்பது செம்பருத்தி

And Beauty: உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் செம்பருத்தி, சருமம் மற்றும் முடி சார...

Advertisement
1/7
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

செம்பருத்திச் செடியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன. 

2/7
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செம்பருத்தி
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செம்பருத்தி

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செம்பருத்திப் பூக்கள் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடன் கூடியவை. குளிர்ச்சி தன்மை கொடுக்கும் செம்பருத்தி செடிகளில் பல வகை உண்டு என்றாலும், செம்பருத்தியின் அனைத்து வகைகளும் மூலிகை மருந்துகளாக பயன்படுகின்றன.

3/7
ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் செம்பருத்தி
ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் செம்பருத்தி

பித்தத்தை குறைக்கும் பண்புகளும், இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் கொண்ட செம்பருத்திப் பூக்கள் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் பயனுள்ளவை.  

4/7
செம்பருத்தியின் வகைகள்
செம்பருத்தியின் வகைகள்

இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் செம்பருத்தி, இரத்த சோகை, மூலம், தூக்கமின்மை, சிறுநீர் பாதை தொற்று (UTI) மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. 

5/7

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் செம்பருத்தி, சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளையும் நீக்குகிறது. 

6/7

முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி பூ மற்றும் இலைகள் மிகவும் சிறந்தவை என்பதால், கூந்தல் செழித்து வளர, செம்பருந்தி எண்ணெய் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

7/7
முடி உதிர்தலை சீர் செய்யும் செம்பருத்தி
முடி உதிர்தலை சீர் செய்யும் செம்பருத்தி

நரைமுடி, முடி உதிர்தல் பிரச்சனைகளை போக்கும் செம்பருத்தியை பல வடிவங்களில் பயன்படுத்தலாம். மலராக தலையில் சூடலாம், தேநீராக பருகலாம், எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவலாம்....





Read More