PHOTOS

வாட்ஸ்அப்பில் குவியும் ஸ்பேம் மெசேஜ்கள்... பிளாக் செய்ய புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

போன் அவசியமாகி போன இந்த காலகட்டத்தில், அது பல்வேறு வகையில் நமது பலவித பணிகளை எளிமையாக்கி...

Advertisement
1/8
ஸ்பேம் கால்கள்
ஸ்பேம் கால்கள்

தொந்தரவைக் கொடுக்கும் ஸ்பேம் கால்கள்: இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், பல வகையான சைபர் மோசடிகள் ஒரு பக்கம் அதிகரித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம், முதலீடு செய்கிறீர்களா, இன்சுரன்ஸ் வாங்க விருப்பமா என்று கேட்டு வியாபார நோக்குடன் நமக்கும் வரும் ஸ்பேம் கால்களுக்கு பஞ்சமில்லை.

2/8
வாட்ஸ்அப் ஸ்பேம் செய்திகள்
வாட்ஸ்அப் ஸ்பேம் செய்திகள்

வாட்ஸ்அப் ஸ்பேம் செய்திகள்: தொலைபேசியில் வரும் ஸ்பேம் கால்களை போலவே, Whatsapp செயலிலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்களில் இருந்து, ஸ்பேம் செய்திகள் நமக்கு தொந்தரவை கொடுக்கும். மேலும் இதன் மூலம் நாம் சைபர் மோசடிக்கும் ஆளாக நேரிடலாம்.

 

3/8
ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய உதவும் அம்சம்
ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய உதவும் அம்சம்

ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய உதவும் அம்சம்: மெட்டா நிறுவனம் அவ்வப்போது, பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய உதவும் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

 

4/8
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: ஸ்பேம் மெசேஜ்களை தடுக்க உதவும் அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. Whatsapp கணக்கின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்து இது உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

5/8
மெமரி மற்றும் பிராசஸர் பாதிக்கும் அபாயம்
மெமரி மற்றும் பிராசஸர் பாதிக்கும் அபாயம்

மெமரி மற்றும் பிராசஸர் பாதிக்கும் அபாயம்: ஸ்பேம் மெசேஜ்கள், பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கும் அதே நேரத்தில், ஸ்மார்ட் போனின் மெமரி மற்றும் பிராசஸரையும் பாதிக்கும். இதனால், ஸ்மார்ட்போனில் செயல்திறன் பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.

6/8
இணைய டேட்டா பாதிப்பு
இணைய டேட்டா பாதிப்பு

இணைய டேட்டா பாதிப்பு: ஸ்பேம் மெசேஜ்கள் மூலம், நமது இணைய டேட்டாவும் தேவையில்லாமல் செலவழிந்து, குறைந்து விடும். தேவையற்ற மெசேஜ்களில் வரும், புகைப்படங்கள் அல்லது கோப்புகள் பதிவிறக்கம் செய்யப்படும் போது, அதற்கு டேட்டா அதிகம் செலவாவது இதற்கு காரணம்.

7/8
பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் அம்சம்
பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் அம்சம்

பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் (Block unknown accounts messages) என்ற இந்த அம்சம் WhatsApp-ல் அறிமுகம் இல்லாத கணக்குகளிலிருந்து உங்களுக்கு வரும் செய்திகளை பிளாக் செய்யும். புதிய அம்சம் அறிமுகமான பின், அதற்கான செட்டிங்கை ஆன் செய்த பின்னர் ஸ்பேம் செய்திகளில் இருந்து விடுதலை பெறலாம்.

 

8/8
ஸ்பேம் கணக்குகள்
ஸ்பேம் கணக்குகள்

ஸ்பேம் கணக்குகள்: பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் என்ற அம்சத்தை ஆக்டிவேட் செய்த பிறகு, அறிமுகம் இல்லாத கணக்கிலிருந்து, வியாபார நோக்கில் அனுப்படும் ஸ்பேம் கணக்குகளை கண்டறிந்து, WhatsApp தானாகவே பிளாக் செய்யும். ஸ்பேம் கணக்கை நீங்கள் தனியாக பிளாக் வேண்டியதில்லை.





Read More