PHOTOS

PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எளிய வழி: முழு செயல்முறை இதோ

ாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க...

Advertisement
1/10
இபிஎஃப் உறுப்பினர்கள்
இபிஎஃப் உறுப்பினர்கள்

பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? உங்கள் பிஎஃப் பணத்தை எளிதாக எப்படி எடுப்பது என்பதை பற்றிய குழப்பம் உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். வீட்டில் இருந்தபடியே பிஎஃப் தொகையை இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) எடுக்கலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2/10
இபிஎஃப் பணம்
இபிஎஃப் பணம்

பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம். அவர்களும் பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கலாம். 

3/10
வருங்கால வைப்பு நிதி
வருங்கால வைப்பு நிதி

சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் வருங்கால வைப்பு நிதி பணத்தை (EPF) ஓய்வு பெறுவதற்கு முன்பு திரும்பப் பெற விரும்பினால், அது கடினம் அல்ல. அதற்காக எங்கும் அலைய தேவையில்லை. ஆன்லைன் முறையில் வருங்கால வைப்பு நிதி தொகையை எளிதாக எடுக்கலாம். அதைப் பற்றி இங்கே காணலாம். 

4/10
இபிஎஃப் சந்தாதாரர்கள்
இபிஎஃப் சந்தாதாரர்கள்

வீட்டில் இருந்தபடியே இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். இதை செய்வது எப்படி? ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணத்தை எடுப்பது எப்படி? இதற்கான செயல்முறையை இங்கே காணலாம். இதற்கு உறுப்பினர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் (EPFO) இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள படிவத்தை பூர்த்தி செய்த பின்னரே நீங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

5/10
இபிஎஃப் தொகை
இபிஎஃப் தொகை

இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க EPFO -வின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு முதலில் செல்ல வேண்டும். இபிஎஃப் கணக்கில் (EPF Account) லாக் இன் செய்ய UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். லாக் இன் -ஐ அங்கீகரிக்க கேப்ட்சாவை உள்ளிடவும்.

6/10
PF கணக்கில் உள்நுழைவது எப்படி
PF கணக்கில் உள்நுழைவது எப்படி

உங்கள் முன் இருக்கும் ஆப்ஷன்களில் 'Manage' என்ற டேப்பை கிளிக் செய்யவும். இதன் பின்னர் 'KYC' ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் 'ஆன்லைன் சேவை' என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக  ‘Claim (Form 31, 19 & 10C)’ என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்த பக்கத்தில் காட்டப்படும் தகவல்களை செக் செய்ய்யவும். KYC மற்றும் கூடுதல் சேவைகள் பற்றிய தகவலையும் சரிபார்க்கவும்.

7/10
EPF க்ளெய்ம்
EPF க்ளெய்ம்

உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிட்டு 'வெரிஃபை' என்பதைக் கிளிக் செய்யவும். தொடரும் செயல்முறையில் ஆன்லைன் அண்டர்டேக்கிங் சான்றிதழுக்கு ‘ஆம்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். EPF க்ளெய்ம் (EPF Claim) தொகை குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

8/10
இபிஎஃப்
இபிஎஃப்

இதன் பிறகு, ‘ஆன்லைன் க்ளெய்மைத் தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, தேவைக்கேற்ப முழு இபிஎஃப் செட்டில்மெண்ட், இபிஎஃப் பார்ட் வித்ட்ராயல், ஓய்வூதியத்தை எடுப்பது போன்ற ஆப்ஷன்கள் உங்களுக்குக் காண்பிக்கப்படும். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து மேலே தொடரவும். இதன் பிறகு தேவையான தொகையை உள்ளிடவும்.

9/10
இபிஎஃப்ஓ
இபிஎஃப்ஓ

இதற்குப் பிறகு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். இந்த ஓரிக்கையை திரும்பப் பெறுதல் முடிவதற்கு முன், முதலாளியும் இந்தக் கோரிக்கையை நிறுவனமும் உள்ளிட வேண்டும். அதன் பிறகு இந்த க்ளெய்ம் விண்ணப்பம் முடிவுபெறும். நீங்கள் விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களில் உங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பப்படும்.

10/10
இபிஎஃப் இருப்பு
இபிஎஃப் இருப்பு

பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்ய ஆன்லைனில் உமங் செயலி மற்றும் இஎஃப்ஓ போர்டல் மூலமாகவும், ஆஃப்லைனில் எஸ்எம்எஸ் அல்லது மிஸ்ட் கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 011 22901406 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, மெசேஜ் மூலம் உங்கள் தொலைபேசியில் PF இருப்பு பற்றிய தகவல் வரும்.





Read More