PHOTOS

Essential Nutrients: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை உணவு! உங்கள் உணவில் இவை அவசியம்!

lth: பல்வேறு வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்க...

Advertisement
1/8
ஆரோக்கியம்
ஆரோக்கியம்

யார் பணக்காரர்கள் என்ற கேள்வி கேட்டதும், வங்கி இருப்பு அல்லது சொத்துக்களின் மதிப்பு நினைவுக்கு வருவதைவிட ஆரோக்கியம் என்ற பதில் வருவது தான் சரியானதாக இருக்கும். உண்மையில் நிம்மதியைத் தருவது செல்வத்தை விட, ஆரோக்கியம் தான்...

2/8
உணவே மருந்து
உணவே மருந்து

உணவுக்கு சரியாக செலவளித்துவிட்டால், மருத்துவருக்கு செலவு செய்ய வேண்டியதில்லை என்று பழமொழியே உண்டு. உண்மையில், ஆரோக்கியமான உணவுக்கு செய்யும் செலவு மட்டுமே ஆரோக்கியமானது என்பதை பலர் புரிந்துக் கொள்வதில்லை

3/8
விட்டமின்கள்
விட்டமின்கள்

நமது தினசரி உணவு சமச்சீரானதாக இருக்க வேண்டும். போதுமான வைட்டமின்கள் கொண்ட உணவாக தேர்ந்தெடுத்து உண்பது நலல்து. செயற்கையாக அல்ல, இயற்கையாகவே உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்களே உடலுக்கு நல்லது

4/8
வீடு விலங்கு இறைச்சி
வீடு விலங்கு இறைச்சி

அசைவ உணவுக்காரர்களை பொருத்த அளவில், புல் உண்ணும் விலங்குகளின் இறைச்சியை பிரதானமாக கொள்ளலாம். இவற்றில் புரதம் முதல் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன

5/8
வேர் காய்கறிகள்
வேர் காய்கறிகள்

பச்சை காய்கறிகளைப் போன்றே வேர் காய்கறிகளையும், அதாவது, பூமிக்கு அடியில் விளையும், உருளைக்கிழங்கும், கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

6/8
பழங்கள்
பழங்கள்

எல்லா சுவையுள்ள பழங்களையும் உண்ணலாம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என பழங்களில் நவரசங்களும் நிறைந்துள்ளன. 

7/8
நெய்
நெய்

ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்த வெண்ணெய் மற்றும் நெய் உணவில் இடம் பெற வேண்டும். வெண்ணெய் மற்றும் நெய் இரண்டுமே மூளை ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு அவசியமானவை

8/8
சமைத்த காய்கறிகள்
சமைத்த காய்கறிகள்

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சமைத்த காய்கறிகள் செரிமானத்திற்கு அவசியமானவை. அவை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.





Read More