PHOTOS

கேழ்வரகில் இருக்கு ஆச்சரியமூட்டும் நன்மைகள்.... ஆனால், இவர்கள் சாப்பிடக் கூடாது

Ragi Benefits And Side Effects: ராகி, அதாவது கேழ்வரகு என்பது ஒரு தானியமாகும். இது மிகவும் பிரபலமான சிறுதானியமாக உள்ளது.

...
Advertisement
1/8
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

ராகியில் (Ragi) உள்ள பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து கோதுமை அல்லது அரிசி மாவை விட அதிகமாகும். அதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. எனவே, இது இரத்த சர்க்கரை அளவைக் (Sugar Level) குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். காலை உணவு அல்லது மதிய உணவில் ராகியைச் சேர்ப்பது நன்மை பயக்கும்.

2/8
இரத்த சோகை
இரத்த சோகை

உடலில் போதுமான இரும்புச்சத்து கிடைக்காதபோது, ​​இரத்த சோகை பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ராகி சாப்பிடுவது ஒரு சிறந்த வழி. உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ராகியை சாப்பிட வேண்டும்.

3/8
தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு
தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு

ராகியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்களுக்கு கவலை, மனச்சோர்வு அல்லது தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் ராகியை உட்கொள்ள வேண்டும். 

4/8
எடை இழப்பு
எடை இழப்பு

ராகியில் உணவு நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உட்கொள்வதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி, தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

 

5/8
எலும்புகள் வலிமை
எலும்புகள் வலிமை

கால்சியத்துடன், ராகியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. கைக்குழந்தைகள், வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ராகி கால்சியத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது.

 

6/8
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால்

ராகியில் ஃபைபர் பைடிக் அமிலம் இருப்பதால் கொலஸ்ட்ராலை இது கட்டுப்படுத்துகிறது. இது அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க ராகி ஒரு ஆரோக்கியமான நல்ல வழியாக இருக்கும்.

7/8
ராகியின் பக்க விளைவுகள்
ராகியின் பக்க விளைவுகள்

சிறுநீரக கற்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அத்தகையவர்கள் ராகியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. தைராய்டு நோயாளிகளும் ராகியை சாப்பிடவே கூடாது. இல்லையெனில் அவர்களுக்கும் பிரச்சனைகள் வரலாம். ராகியை அதிக அளவில் சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் வாயு, வாய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More