வெளியான லியோ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியாகி தமிழகத்தில் வசூல் ச...
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான இரண்டாவது படமான லியோ உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் வசூல் செய்துள்ளது.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படம் LCUல் வருமா? வராதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
கடைசி நிமிடம் வரை படக்குழு இதில் சஸ்பென்ஸ் வைத்து இருந்தது. இறுதியில் இந்த படமும் LCUல் ஒரு பகுதியாக உருவாகி உள்ளது.
லியோவாக இருந்த விஜய், பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் மறைந்து வாழ்வது போல் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.
கைதி 2 படத்தில் LCU விரிவாக காமிக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார். தலைவர் 171 படத்திற்கு பிறகு கைதி 2 தொடங்கப்படும்.
LCUல் ஏற்கனவே பகத் பாசில் இருப்பதால், விஜய் - பகத் காமினேஷன் பற்றி லோகேஷ் இடம் கேட்டபோது, இருவரும் சத்தியமங்கலம் அனாதை இல்லத்தில் ஒன்று சேர்வார்கள் என்று கூறி உள்ளார்.
கைதி படத்தில் கார்த்தியின் மகளும் இதே இடத்தில் தான் இருப்பதாக காண்பிக்கப்பட்டு இருப்பார். எனவே, கார்த்தி, விஜய், பகத் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளார் லோகேஷ்.