PHOTOS

ரிலீஸ் ரேஸில் பெரிய ஹீரோக்களின் படங்கள்! எந்த படம், எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?

Movies Release Date : தமிழ் திரையுலகில், பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளியாகின்றன. அவற்றின் ...

Advertisement
1/8
Vidaamuyarchi Release Date
Vidaamuyarchi Release Date

அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம், வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

2/8
The GOAT Movie
The GOAT Movie

தீவிரமாக அரசியலில் இறங்க இருக்கும் விஜய், தி கோட் (The Greatest Of All Time) படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு இதில் இரட்டை வேடம். சில நாட்களுக்கு முன்னர், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது. 

3/8
The GOAT Release Date
The GOAT Release Date

தி கோட் படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித் ரசிகர்களும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். 

4/8
Vettaiyan Release Date
Vettaiyan Release Date

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், வேட்டையன். இது, ரஜினியின் 170வது படமாகும். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல், மலையாள நடிகர் பகத் பாசில் வரை இதில் பல்வேறு நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றனர். மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல நடிகைகளும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் வருகின்றனர். இந்த படம், வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

5/8
Kanguva
Kanguva

வேட்டையன் படத்துடன் மோதும் இன்னொரு படம், கங்குவா. சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். பாபி டியோல், திஷா பதானி, நட்ராஜன் நட்டி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது. 

6/8
Kanguva Release Date
Kanguva Release Date

கங்குவா திரைப்படமும், அக்டோபர் 10ஆம் தேதிதான் வெளியாகிறது. இதையடுத்து, ரஜினியின் வேட்டையன் படத்துடன் மோதும் இந்த படத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

7/8
Brother Movie
Brother Movie

ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், பிரதர். இந்த படத்தில் இவருடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். தீபாவளியையொட்டி, 31ஆம் தேதி வெளியாகின்றது.

8/8
Amaran Release Date
Amaran Release Date

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படமும், தீபாவளியை ஒட்டி அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். புல்வாமா தாக்குதலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன், இதில் மேஜர் முகுந்த் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 





Read More