PHOTOS

சேப்பாக்கம் டெஸ்ட் வரலாறு: அதிகபட்ச ரன்களை அடித்த டாப் 7 வீரர்கள் - தோனியும் லிஸ்ட்ல இருக்கார்!

tats: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிகபட்ச ரன்கள...

Advertisement
1/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

வரும் செப். 19ஆம் தேதி இந்தியா - வங்கதேசம் (IND vs BAN 1st Test) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (Chennai Chepauk Stadium) நடைபெற இருக்கிறது. அந்த வகையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்களை குவித்த டாப் 7 பேட்டர்களை இங்கு காணலாம். 

 

2/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

டீன் ஜோன்ஸ் (Dean Jones): மறைந்த ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் 1986ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 330 பந்துகளுக்கு 210 ரன்களை அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் 7ஆவது இடத்தை பிடிக்கிறார்.

 

3/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

ஜோ ரூட் (Joe Root):  2021ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் 377 பந்துகளுக்கு 218 ரன்களை அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் 6ஆவது இடத்தை பிடிக்கிறார்.

 

4/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

குண்டப்பா விஸ்வநாத் (Gundappa Viswanath): 1982ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் குண்டப்பா விஸ்வநாத் () 374 பந்துகளில் 222 ரன்களை அடித்திருந்தார். இவர் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடிக்கிறார்.

5/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

எம்எஸ் தோனி (MS Dhoni): 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி 265 பந்துகளில் 224 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 4ஆவது இடத்தை பிடிக்கிறார்.

 

6/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar): 1983ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி ஓப்பனர் சுனில் கவாஸ்கர் 425 பந்துகளில் 236 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 3ஆவது இடத்தை பிடிக்கிறார்.

 

7/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

கருண் நாயர் (Karun Nair): 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் 381 ரன்களுக்கு 303 ரன்களை அடித்தார். இவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடிக்கிறார். 

 

8/8
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

வீரேந்திர சேவாக் (Virender Sehwag): இவர் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறார். 2008ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 304 பந்துகளில் 319 ரன்களை சேவாக் அடித்திருந்தார். இதுதான் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 





Read More