PHOTOS

Best Juices: ரத்தசோகையா? ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆரோக்கியமான காய்கனி சாறுகள்

ells: இரத்த சோகை என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இரத்த சிவப்பணுக்கள...

Advertisement
1/8
நோயெதிர்ப்பு ஜூஸ்கள்
நோயெதிர்ப்பு ஜூஸ்கள்

குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும்போது, இரத்த சோகை போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சில காய்கறிகள் இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்துக் கொண்டு, தினசரி உணவில் சேர்ந்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்

2/8
முருங்கை இலை ஜூஸ்
முருங்கை இலை ஜூஸ்

வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மேக்னிசியம்,  நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பீட்டாகரோடின் நிறைந்துள்ளன. முருங்கைக்கீரையில் இருந்து எடுக்கப்படும் முருங்கைச் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைசாறு மிகவும் நல்லது. முருங்கை சாறு அருந்துவது உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 8 முதல் 10 முருங்கை இலைகளை வேறு ஏதேனும் காய்கறி சாற்றில் கலந்து தினமும் உட்கொள்ளவும்

3/8
கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸ்

கேரட்டை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இதில் உள்ள வைட்டமின் ஏ போன்ற சில ஊட்டச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, கேரட்டை சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பது ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்

4/8
பச்சை பீன்ஸ் சாறு
பச்சை பீன்ஸ் சாறு

இரத்த சோகை அபாயத்தை நீக்க, அவ்வப்போது பச்சை பீன்ஸ் சாறு குடுக்கலாம். குளிர்காலத்தில் கிடைக்கும் பல்வேறு வகையான பச்சை மற்றும் பச்சை பீன்ஸ் உங்கள் உடலுக்கு வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தை வழங்குகிறது, இது உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.

 

5/8
கீரை ஜூஸ்
கீரை ஜூஸ்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கீரை சாறு குடித்து வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகி, இரத்த சோகை போன்ற நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். கூடுதலாக, இரும்பு மற்றும் பல வகையான வைட்டமின்கள் கீரையில் காணப்படுகின்றன, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை உட்பட பல கீரைகளின் சாறு உடலுக்கு நன்மை பயக்கும்

6/8
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறு

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடியுங்கள், நீங்கள் விரும்பினால், மற்ற காய்கறிகளுடன் பீட்ரூட்டைக் கலந்து சாறு எடுக்கலாம், இது சுவையுடன் அபரிமிதமான நன்மைகளைத் தரும்.

7/8
முட்டைகோஸ் ஜூஸ்
முட்டைகோஸ் ஜூஸ்

இரத்த சோகை தொடர்பான பிரச்சனைகளை போக்க முட்டைக்கோஸ் சாறு குடிப்பதும் மிகவும் நல்லது. முட்டைக்கோஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு இருப்பதால், இது இரத்த சிவப்பணுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது, இதனால் இரத்த சோகை அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.  

8/8
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை





Read More