PHOTOS

இன்றைய ராசிபலன்கள்: இந்த ராசிகாரர்களுக்கு கவலை வேண்டாம்.. ஜாலியா இருங்க..!

Today Horoscope: இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்

...
Advertisement
1/13
பொறுப்புத் துறப்பு:
பொறுப்புத் துறப்பு:

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

2/13
மேஷம்
மேஷம்

இன்றைய நாள் உங்கள் பொறுமை சோதிக்குள்ளாகும் நாளாக இருக்கும். இன்று மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பது சிறந்தது. தெளிவான மனநிலை மூலம் சாதகமான முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் சில கடினமான சவால்களை சந்திக்க நேரிடலாம். சூழ்நிலைகளை திறமையாக கையாள வேண்டும் அல்லது அமைதியாக செயல்பட வேண்டும். உங்கள் மனைவியிடம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்லிறது. நல்லது தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

3/13
ரிஷபம்
ரிஷபம்

இன்று சமநிலை உணர்வு காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவை பெறுவீர்கள். பொதுவாக இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய பணிகளை திறமையாக மேற்கொள்ளும் சுறுசுறுப்பு உங்களிடம் காணப்படும். உங்க துணையிடத்தில் இனிமையாக பேச வாய்ப்பு உண்டு. இது இருவருக்கும் இடையே உறவு பிணைப்பு வலுப்படுத்தூம். பணம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்புகள் இருக்கும. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

4/13
மிதுனம்
மிதுனம்

இன்று பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறலாம். இதன் மூலம் உங்களுக்கு மனதெளிவு கிடைக்கும். நம்பிக்கையான சிந்தனை உருவாகும். பணியிடத்தில் உங்கள் நேர்மறைக்கு சாதகமான பலன்கள் கிடைக்க் வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உறவு பிணைப்பு ஏற்படும். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கும். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

5/13
கடகம்
கடகம்

இன்றைய செயல்களை பொறுமையுடன் நீங்கள் சமயோகித புத்தியுடன் மேற்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பத்தை உண்டாக்கலாம். இத்தகைய உணர்வுகளுக்கு ஆளாகுவதை தவிர்ப்பது நல்லது. இன்றைய பணிகளை முடிக்க நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உறவுகளிடையே நம்பிக்கையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று பணம் சம்பாதிக்க குறைந்த வாய்ப்பே இருக்கிறது. பணம் சேமிப்பது கடினம். எனவே நிதி சம்பந்தமான விஷயங்களை ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கலாம். முதுகுவலி ஏற்பட வாய்ப்பு. உங்கள் ஆரோக்கியத்தை கவனம் செலுத்த வேண்டியது ரொம்ப நல்லது. 

6/13
சிம்மம்
சிம்மம்

இன்று சில சௌகரியங்களை நீங்க விட்டுக்கொடுக்க நேரிடலாம். நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆலோசனைகளை பெறுங்கள். பணியிடத்தில் பதட்டம் காணப்படும். உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்களுடைய உறவில் மனக்குழப்பம் பாதிப்பை ஏற்படுத்தும். பணவரவு, செலவு இரண்டும் சேர்ந்து இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அதிக உழைப்பு காரணமாக கால்வலி அல்லது முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாகவும், பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

7/13
கன்னி
கன்னி

உங்களுக்கு சாதகமான நாள். உறுதி மற்றும் நம்பிக்கை உணர்வு மூலம் உங்களுடைய இலக்குகளை அடையலாம். பணியிடத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்படுகிறது. உங்கள் பணிகளை திறமையாக துல்லியமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய கருத்துக்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உறவில் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கக்கூடிய நாள். இன்று அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. இது உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது.

8/13
துலாம்
துலாம்

ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சிறந்ததாக்கலாம். இதன் மூலம் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும். இன்று நல்ல பலன்களுக்கான திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மேலதிகாரிகளுடன் நல்லுறவு பராமரிக்க இயலாது. விருப்பமில்லாத சூழ்நிலைகளை திறமையாக கையாள அமைதியாக இருக்க வேண்டும். உங்க துணையிடத்தில் பழகும் பொழுது சில கட்டுப்பாடுகளை நீங்க மேற்கொள்ள வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத காரணங்களுக்காக அதிகம் செலவு செய்ய ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பண விஷயங்களை நீங்க கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். 

9/13
விருச்சிகம்
விருச்சிகம்

இன்று சில சௌகரியங்களை நீங்க விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிடைக்கும். தடைகள் காணப்பட்டாலும் திட்டமிட்டு செயல்பட்டால் இதனை நீங்கள் சமாளிக்க முடியும். கவனக்குறைவின் காரணமாக பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. இது உங்களுடைய உறவில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். உங்க மனைவியிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். அதிகரிக்கும் செலவினங்களை நீங்க எதிர்கொள்ள நேரிடலாம். பணத்தை கவனமாகவும், சாதுரியமாகவும் கையாள வேண்டும்.

10/13
தனுசு
தனுசு

இன்று சில மாற்றங்களும், சில பயணங்களும் காணப்படும். தொண்டு நடவடிக்கைகள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். சாதாரண செயல்களை ஆற்றுவதில் கூட உங்களுக்கு தாமதங்கள் காணப்படலாம். பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். எனவே பணிகளை திட்டமிட்டு திறமையாக கையாள வேண்டியது நல்லது. கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் காணப்படும். அமைதியான முறையில் அதனை தீர்க்க வேண்டியது நல்லது. நிதி நிலைமையில குறைந்த வளர்ச்சி காணக்கூடிய நாள். இன்று பணத்தை தக்கவைத்துக் கொள்ள கடினமாக நீங்க உழைக்க வேண்டும். கால்வலி ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஓய்விற்கு நேரம் ஒதுக்குங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இன்றைய நாள் உங்களுக்கு நல்லது.

11/13
மகரம்
மகரம்

இன்று உங்களுக்கு செழிப்பான நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்களுடைய வளர்ச்சிக்கு உதவும் தக்க முடிவுகளை நீங்க எடுக்கலாம். பணியிடத்தில் எதிர்பார்ப்பதை விட அதிக வளர்ச்சி காணப்படும். உங்க மேலதிகாரியின் ஆதரவு பாராட்டு இருக்கும். உங்க துணையிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களுடைய சேமிப்பு உயர வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியமாக இருப்பீங்கள். 

12/13
கும்பம்
கும்பம்

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். திறமையாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். இன்று முக்கி முடிவுகளை நீங்க எடுப்பீர்கள். பணிகளை விரைவாக முடிக்க நேரிடலாம். பணிகளை எளிதாக கையாள உங்களுடைய நம்பிக்கையான அணுகுமுறை உதவும். தம்பதிகளுக்கு இடையே பரஸ்பர மரியாதை காணப்படும். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். சிரமான நிதிநிலைமைக்கான வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையான மனநிலை காரணமாக உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

13/13
மீனம்
மீனம்

இன்று அவ்வளவு எளிதாக எதையும் நீங்கள் பெற முடியாது. எனவே கவனமாகவும் உறுதியாகவும் செயல்பட வேண்டிய நாள். பணியைப் பொறுத்தவரை இன்று பலன்கள் தரக்கூடிய நாளாக இருக்காது. கூடுதல் பணிசுமை இருக்கும். தாயுடனான கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் சூழ்நிலைகளை பக்குவமாக கையாள வேண்டும். இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.





Read More