PHOTOS

திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் - இனி தகராறு வராது!

ருமண உறவில் கணவன் - மனைவி இடையே தகராறு வந்துகொண்டே இருந்தால், இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். இதனால் எதிர்கா...

Advertisement
1/8
திருமண உறவு
திருமண உறவு

திருமண உறவில் பிரச்னைகள் அனைத்து தம்பதிகளுக்கும் இருக்கும். நமக்கு மட்டும்தான் இந்த பிரச்னை என்ன யாரும் தங்களை தாங்களே வருத்திக்கொள்ளக் கூடாது. 

 

2/8
திருமண உறவு
திருமண உறவு

அப்படி திருமண உறவில் தொடர்ந்து தகராறு வரும்பட்சத்தில், பிரச்னையை தீர்க்க இந்த 5 விஷயங்களில் தம்பதிகள் கவனம் செலுத்த வேண்டும். அவை குறித்து இங்கு விரைவாக காணலாம். 

 

3/8
திருமண உறவு
திருமண உறவு

முதலில் என்னதான் பிரச்னை என்பதை தம்பதியர் இருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். உறவில் தங்களுக்குள் எது பிரச்னையாக இருக்கிறது என்பதை இருவரும் கண்டுபிடிப்பதே, அதை தீர்ப்பதற்கான முதல் படியாகும். 

 

4/8
திருமண உறவு
திருமண உறவு

அதன்பின், அந்த பிரச்னை குறித்து நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். தீவிரமாக அந்த பிரச்னையை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படை வேர் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். 

 

5/8
திருமண உறவு
திருமண உறவு

அதேபோல், அந்த சண்டைக்கும், பிரச்னைக்கும் நீங்கள் தனியே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் உங்களின் பார்ட்னரோடு நடந்துகொள்ளும் முறை, பேசும் தொனி உள்ளிட்டவற்றில் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

 

6/8
திருமண உறவு
திருமண உறவு

இந்த பிரச்னை அல்லது சண்டையின் விளைவு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அதுசார்ந்த  உங்களுடைய பார்வையை சற்று மாற்ற வேண்டும். இது உங்களுக்கு மேலும் தெளிவை தரும்.

 

7/8
திருமண உறவு
திருமண உறவு

அந்த சண்டையின் மூலம் உங்களுக்குத் தேவையானவை, எதில் சமரசம் செய்ய தயாராக இருக்கிறோம் என்பது குறித்து ஆரோக்கியமான, வெளிப்படையான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

 

8/8
திருமண உறவு
திருமண உறவு

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. திருமண உறவில் பிரச்னை வந்தால் நீங்கள் உரிய வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதை Zee News உறுதிப்படுத்தவில்லை. 

 





Read More