PHOTOS

Anti-Ageing Tips: 50+ வயதிலும்... இளமையாக இருக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!

உடல்நலம் மட்டுமின்றி, சருமத்தில் சுருக்கம், வறட்சி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேர்டுகிறது. நீங்கள் உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்க...

Advertisement
1/8
இளமை
இளமை

Anti-Ageing Tips: நம் சருமத்தில் காணப்படும் கொலாஜன் என்ற தனிமம், நம்மை இளமையாகவும், வைத்திருக்க  அத்தியாவசியமானது. கொலாஜன் என்பது நம் உடலில் காணப்படும் இயற்கையான புரதம். இது நமது சருமத்தைத் தவிர, நகங்கள் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பாகும்.

2/8
புரதம்
புரதம்

சருமத்தை இளமையாக வைத்திருக்க, டயட்டில் புரத உணவின் அளவை அதிகரிக்க வேண்டும். நமது உடலில் உள்ள திசுக்களை உருவாக்க புரதம் உதவுகிறது. இது தவிர, நமது கொலாஜன் அளவை அதிகரிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும்,  தாவர அடிப்படையிலான புரதம் சருமத்திற்கு அதிக நன்மை பயக்கும்.

3/8
ரெட்டினோல்
ரெட்டினோல்

ரெட்டினோல் நிறைந்த கிரீம்கள் நமது தோலில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் பிரச்சனை குறைகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமது சருமத்தில் உள்ள செல்கள் அதிகரிக்கும். எனவே, உங்கள் சருமத்தை பராமரிக்க ரெட்டினோல் உள்ள க்ரீமை தினமும் பயன்படுத்தலாம்.

4/8
தூக்கம்
தூக்கம்

தூக்கமின்மை நமது சருமத்தின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தினமும் 7-8 மணிநேரம் தூங்காமல் இருப்பது நமது சருமத்தை பாதிக்கிறது. இது தவிர நமது கொலாஜன் அளவையும் பாதிக்கிறது. எனவே, தினமும் 6-7 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

5/8
சரும பராமரிப்பு
சரும பராமரிப்பு

சருமத்தை பராமரிக்க சிறந்த நேரம் இரவு. இரவில் தூங்கும் முன் சருமத்தில் ஏதேனும் மாய்ஸ்சரைசிங் கிரீம் அல்லது எண்ணெய்களை தடவிக் கொள்ளும் பழக்கம் இருக்கட்டும், அது உங்கள் சருமத்தை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

6/8
உடற்பயிற்சி
உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி செய்வது நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது பல சுகாதார அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாம் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், ஆரம்ப முதுமை நிலை நம் சருமத்தில் தோன்ற ஆரம்பிக்கும்.

7/8
தவிர்க்க வேண்டிய உணவுகள்
தவிர்க்க வேண்டிய உணவுகள்

நீண்ட காலம் இளைமையோடு இருக்க, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வறுத்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

8/8
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.





Read More