PHOTOS

காதலிக்கப் போறீங்களா... அப்போ இந்த 5 பழக்கங்களை தூக்கி வீசுங்க!

க ஒரு காதல் உறவுக்குள் நீங்கள் செல்ல இருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் இந்த 5 பழக்கவழக்கங்கள் இருந்தால் அதனை உடனே கைவிட்டுவிடுங்கள். ...

Advertisement
1/8
காதல் உறவு
காதல் உறவு

ஆரோக்கியமான காதல் உறவுக்கு ஆண் - பெண் இரண்டு பேர் தரப்பிலும் சில நகர்வுகளை செய்ய வேண்டும். அதுவும் புதிதாக காதல் உறவுக்குள் செல்பவர்கள் முன்கூட்டியே சில விஷயங்களை திட்டமிட வேண்டும். 

 

2/8
காதல் உறவு
காதல் உறவு

அந்த வகையில், புதிதாக காதல் உறவுக்குள் செல்லும் ஒருவர், அது ஆணோ, பெண்ணோ உங்களிடம் இருக்கும் இந்த 5 பழக்கவழக்கங்களையும் கைவிட்டே ஆக வேண்டும். இந்த பழக்கவழக்கங்களை நீங்கள் காதல் உறவிலும் தொடர்ந்தால் பிரச்னையே அதிகரிக்கும். 

 

3/8
காதல் உறவு
காதல் உறவு

காதல் உறவில் அதிகம் எதிர்பார்ப்பது மிகவும் பிரச்னைக்குரிய ஒன்று. காதல் உறவில் பார்ட்னரிடம் இருந்து எதிர்பார்க்கலாம், ஆனால் அனைத்து விஷயத்திற்கும் பெரிய எதிர்பார்ப்புகளை வைப்பது சிக்கலை ஏற்படுத்தும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்பதால் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். 

 

4/8
காதல் உறவு
காதல் உறவு

வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதுதான் காதல் உறவில் இருப்பதற்கான அழகு. உங்களின் உணர்வுகள், பிரச்னைகள், எதிர்பார்ப்புகளை வெளிபடுத்த வேண்டும். இல்லையென்றால் கருத்து வேறுபாடுக்கு இது இட்டுச்செல்லும். எப்போதும் எந்த விஷயத்தையும் மறைக்காதீர்கள்.

 

5/8
காதல் உறவு
காதல் உறவு

நம்பிக்கை என்பது காதல் உறவில் மிக முக்கியமான ஒன்றாகும். எதற்கெடுத்தாலும் தப்பு சொல்வதும், அனைத்தையும் எதிர்மறையாக அணுகுவதும் உங்கள் பார்ட்னருக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, காதல் உறவில் நேர்மறையான விஷயங்களை அதிகமாக்குங்கள். 

 

6/8
காதல் உறவு
காதல் உறவு

அதேபோல், அதிகம் யோசிக்காதீர்கள். இப்படியானால் அது இப்படியாகிவிடுமோ, இது அப்படியாகிவிடுமோ என அதிகமாக யோசிப்பது காதல் உறவில் பதற்றத்தை ஏற்படுத்தும். காதல் உறவில் வரும் பிரச்னைகளை சாதாரணமாக கையாளுங்கள், அதனை அதிகமாக யோசித்து குழப்பிக்கொள்ளாதீர்கள். 

 

7/8
காதல் உறவு
காதல் உறவு

காதல் உறவுக்கு வந்துவிட்டால் உங்கள் பார்ட்னர் சுதந்திரமாக இயங்க ஒப்புக்கொள்ளுங்கள். அவர்களுக்கான இடத்தை அளியுங்கள். அவர்களையும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்தினால் அது ஆரோக்கியமான உறவாக இருக்காது, அதிருப்தியே மேலோங்கும். 

 

8/8
காதல் உறவு
காதல் உறவு

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை. 





Read More