PHOTOS

31st July Deadlines: ஜூலை 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள்

ும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 31 க்கு முன் நீங்கள் சமாளிக்க வேண்டிய பல பணிகள் உள்ளன. அதன்படி பிஎம் கிசான் ய...

Advertisement
1/4
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும்

அரசு வெளியிட்டுள்ள டீலைன் படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இந்த நாளில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதத்துடன் பின்னர் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசு இன்னும் நீட்டிக்கவில்லை. காலக்கெடுவுக்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் அபராதமாக ரூ.5,000 செலுத்த வேண்டும்.

 

2/4
சிலிண்டர் விலை உயர்வு
சிலிண்டர் விலை உயர்வு

சிலிண்டரை மலிவாக வாங்க விரும்பினால், முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள். உண்மையில், சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை முடிவு செய்யும். இந்த நேரத்தில் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தலாம்.

 

3/4
பிரதம மந்திரி கிசான் யோஜனா
பிரதம மந்திரி கிசான் யோஜனா

நீங்கள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் பயனாளியாக இருந்தால், ஜூலை 31 ஆம் தேதிக்கு முன் கேஒய்சி ஐ செய்து முடிக்கவும். இ-கேஒய்சி செய்யாத விவசாயிகள், 12வது தவணையை பெற முடியாது.

4/4
வாகனத்தில் மானியம்
வாகனத்தில் மானியம்

நீங்கள் மின்சார வாகனத்தை மானியத்தில் வாங்க விரும்பினால், கோவா அரசு உங்களுக்கு மானியம் வழங்கும். உண்மையில், கோவா அரசு ஜூலை 31 வரை வாங்கும் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கும். அதன்படி இரு சக்கர வாகனத்தில் 30,000 ரூபாயும், மூன்று சக்கர வாகனத்தில் 60,000 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்தில் 3 லட்சம் வரையும் வழங்கும். இதற்கு ஜூலை 31 ஆம் தேதிக்குள் மின்சார வாகனம் வாங்கி மானியம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.





Read More