PHOTOS

துணிச்சலான பெண்களின் ராசிகள் இவைதான்: இவங்ககிட்ட ஜாக்கிரதை

ஜோதிடத்தில், அனைத்து 12 ராசிகளின் இயல்பு, நடத்தை, ஆளுமை, பண்புகள் என அனைத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஒருவரது எதிர்காலத்தை வடிவமைப...

Advertisement
1/4
துணிச்சலான பெண்கள்
துணிச்சலான பெண்கள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட 3 ராசிகளில் பிறந்த பெண்கள் மிகவும் துணிச்சலானவர்களாக, அனைத்து பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர்கொள்பவர்களாக கருதப்படுகிறார்கள். சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் அதன் முன்னால் துவண்டு போகாமல் திடமாக நிற்பார்கள். அந்த 3 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தைரியமானவர்கள், அச்சமற்றவர்கள்

2/4
மேஷம்
மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசி பெண்கள் மிகவும் தைரியமாகவும் துணிச்சலுடனும் இருக்கிறார்கள். ரிஸ்க் எடுக்க அவர்கள் எப்போதும் அஞ்ச மாட்டார்கள். தங்களை நோக்கி வரும் எந்த சவாலைக் கண்டும் அவர்கள் பயப்படுவதில்லை. தங்களுக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால், அதை நிறைவேற்றியபின் தான் இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். இவர்கள் சுயமரியாதை உள்ளவர்கள்.

3/4
சிம்மம்
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரியனின் செல்வாக்கின் காரணமாக, இந்த ராசி பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். இவர்கள் நல்ல தலைவர்களாகவும் திகழ்வார்கள். இந்த பெண்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ள பயப்படுவதில்லை. சிம்ம ராசி பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அனைத்து பணிகளையும் இவர்கள் குறித்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள். இந்த பெண்களுக்கு மிக விரைவில் கோபம் வரும், ஆனால் அவர்கள் மிக விரைவில் சாமாதானமும் ஆகி விடுவார்கள். 

4/4
விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் மிகவும் தைரியமும் துணிச்சலும் கொண்டவர்கள். இவர்கள் சிறு வயதிலேயே இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்ற முழு முனைப்புடன் போராடுகிறார்கள். ரிஸ்க் எடுப்பதில் இவர்கள் எப்போதும் பின்வாங்குவதில்லை. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தவல்களை உறுதிப்படுத்தவில்லை.)





Read More