PHOTOS

Peanut Butter ஏற்படுத்திய மூளை பாதிப்பு; 220 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Advertisement
1/5
சாண்டல் கியாகெலோன் வழக்கு
சாண்டல் கியாகெலோன் வழக்கு

நடிகையும் மாடலுமான சாண்டல் கியாகலோனுக்கு ரூ .220 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க லாஸ் வேகாஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாண்டல் கியாகலோன் கடந்த 8 ஆண்டுகளாக படுக்கையில் முடங்கிவிட்டார்.

2/5
பீனட் பட்டரால் (peanut butter ) ஏற்பட்ட ஒவ்வாமை
பீனட் பட்டரால் (peanut butter ) ஏற்பட்ட ஒவ்வாமை

மாடலான சாண்டல் கியாகலோன் பீன பட்டர் பிஸ்கட் சாப்பிட்ட பிறகு மூளை பாதிப்புக்குள்ளானார்.சக மாடல்களில் ஒருவர்  தான் அவருக்கு இந்த பீனட் பட்டர் கலந்த பிஸ்கட் கொடுத்தார். இந்த சம்பவம் நடந்த 2013 ஆம் ஆண்டில், லாஸ் வேகாஸ் நகரில் நடந்த மேஜிக் பேஷன் டிரேட் ஷோவில் சாண்டல் மாடலிங் செய்து கொண்டிருந்தார். 

3/5
சாண்டல் ஒரு அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு (anaphylactic shock) உள்ளானார்.
சாண்டல் ஒரு அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு (anaphylactic shock) உள்ளானார்.

சாண்டல் கியாகலோனுக்கு அனாபிலாக்டிக் அதிர்ச்சி (anaphylactic shock) ஏற்பட்டது. வேர்க்கடலை வெண்ணெய் ஒவ்வாமை காரணமாக சாண்டல் கியாகெலோனுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது. ஒரு நபருக்கு  ஏற்பட்ட ஒவ்வாமை, அனாபிலாக்டிக் அதிர்ச்சி  நிலையை ஏற்படுத்துகிறது. இது ஒரு அரிய வழக்கு. இந்த வழக்கில், நோயாளிக்கு உடனடியாக எபிநெஃப்ரின் (epinephrine) என்ற மருந்தைப் கொடுக்க வேண்டும். ஆனால் சாண்டலுக்கு இந்த மருந்து கிடைக்கவில்லை.

4/5
கியாக்கலோனுக்கு IV மூலம் எபினெஃப்ரின் வழங்கப்படவில்லை
கியாக்கலோனுக்கு IV மூலம் எபினெஃப்ரின் வழங்கப்படவில்லை

சாண்டலுக்கு சரியான நேரத்தில் கிடைக்க வேண்டிய மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்ற சாண்டலின் வழக்கறிஞரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல், கடந்த 8 ஆண்டுகளாக தனது படுத்த படுக்கையாக இருக்கிறார். இந்த இழப்பீடு மூலம், அவரது  தந்தை, சாண்டலுக்கு சரியான சிகிச்சை அளிக்க உதவும்

5/5
எபினெஃப்ரின் என்பது அட்ரினலைன் என்ற ஹார்மோனுக்கு நிகரான மருந்தாகும்.
எபினெஃப்ரின் என்பது  அட்ரினலைன் என்ற ஹார்மோனுக்கு நிகரான மருந்தாகும்.

எபினெஃப்ரின் என்பது அட்ரினலின் எனப்படும் நம் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோனின் ஒத்திசைவான வடிவமாகும். சாண்டல் எதிர்கொண்ட பிரச்சினைகளில் ஒன்று, ஒவ்வாமை எதிர்விளைவுக்குப் பிறகு உடனடியாக அரிப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்பட்டன. ஆனால் இதன் காரணமாக, அனாபிலாக்ஸிஸும் சில நேரங்களில் ஏற்படலாம். இதில் இரத்த அழுத்தம் வேகமாக குறைகிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

 





Read More