PHOTOS

ஆகஸ்டில் மாணவர்களுக்கு டபுள் குஷி காத்திருக்கு... பள்ளி எத்தனை நாள்கள் லீவ் தெரியுமா?

ust 2024: வரும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு பள்ளிகளுக்கான மொத்த விடுமுறை நாள்கள், அதில் பொது விடுமுறைகள் எப்போது, மொத்த வேலைநாள்கள்...

Advertisement
1/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் போது சனி, ஞாயிறு விடுமுறையை தாண்டி ஏதாவது ஒரு நாள் லீவ் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 

 

2/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

அதுவும் புதிய மாதம் பிறக்கும்போது, வீட்டில் இருக்கும் கேலண்டரில் வரும் மாதத்தில் எத்தனை நாள்கள் விடுமுறைகள் இருக்கின்றன என்பதை இங்கு பலரும் பார்த்திருப்பீர்கள். 

 

3/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு எத்தனை வேலைநாள்கள் உள்ளது, எந்தெந்த தினங்களில் விடுமுறை விடப்படுகிறது என்பதை  பள்ளி செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். 

 

4/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

சனி, ஞாயிறு விடுமுறையை தாண்டி சில மாதங்கள் மட்டும் பொது விடுமுறை இருக்கும். ஒரு மாதத்தில் ஒன்று வந்தாலே நாம் குஷியாகிவிடுவோம். அப்போது ஒரு மாதத்தில் இரண்டு முறை பொது விடுமுறைகள் வந்தால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. 

 

5/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

இந்நிலையில், மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் இரண்டு பொது விடுமுறைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாள்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம். 

 

6/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

வரும் ஆகஸ்ட் மாதத்தில் 22 வேலை நாள்கள் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறையின் இணையத்தளத்தில் உள்ள கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக. 4, 11, 18, 25 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி விடுமுறை ஆகும். 

 

7/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

மேலும் ஆக. 3 மற்றும் ஆக. 17 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளிலும் பள்ளி விடுமுறை எனவும் பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

8/8
பள்ளி விடுமுறை
பள்ளி விடுமுறை

அதுமட்டுமின்றி ஆக. 15ஆம் தேதி (வியாழக்கிழமை) சுதந்திர தினம் மற்றும் ஆக. 26ஆம் தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி என இரண்டு பொது விடுமுறைகள் உள்ளன. ஆக மொத்தம் 8 விடுமுறை நாள்கள் இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கிருஷ்ண ஜெயந்தி திங்கட்கிழமை வருவதால் ஆக. 25, 26 ஆகிய இரண்டு நாள்களும்  மாணவர்களுக்கு விடுமுறை இருக்கும். 





Read More