PHOTOS

அஜித்தின் விடாமுயற்சியில் இருந்து த்ரிஷா வெளியேற்றம்? ஏன் தெரியுமா?

ஃபிலிம் சிட்டியில் விடாமுயற்சி படத்திற்கான செட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் புதிய போஸ்...

Advertisement
1/5

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான 'துணிவு' படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. 

 

2/5

பல காலதாமதங்களை சந்தித்த இந்த படம் ஒருவழியாக படப்பிடிப்பிற்கு தயாராக உள்ளது. அஜித்தின் 62வது படமான விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

 

3/5

முன்னதாக ‘விடாமுயற்சி’ படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை அணுகியதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

 

4/5

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பாடலுடன் சேர்ந்து தமன்னாவும் டிரெண்டிங்கில் உள்ளார்.

 

5/5

விடாமுயற்சி படத்தில் தமன்னா இணைந்தால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் சேர்ந்து நடிக்க உள்ளார். 





Read More