PHOTOS

வாத்தி கம்மிங்: Team India-வில் தல தோனியின் ரீ-எண்ட்ரி!!

கக் கோப்பைக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக (mentor) நியமிக்கப்பட்டத...

Advertisement
1/5
MS Dhoni: வெற்றிகரமான கேப்டன்
MS Dhoni: வெற்றிகரமான கேப்டன்

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அவரது தலைமையின் கீழ், இந்திய அணி இந்தியாவின் முதல் மற்றும் ஒரே டி 20 உலகக் கோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்றது. இது தவிர, தோனி, 2011 ஐசிசி உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். மூன்று ஐசிசி கோப்பைகளிலும் அணியை வெல்ல வைத்த ஒரே இந்திய கேப்டன் தோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2/5
MS Dhoni: கேப்டன் கூல்
MS Dhoni: கேப்டன் கூல்

மகேந்திர சிங் தோனி 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படுகிறார். போட்டி எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், அணியின் நிலை மோசமாக இருந்தாலும், மாஹி தனது சமநிலையை இழந்ததில்லை. அவர் இவ்வளவு கூலாக இருப்பதால், கடினமான போட்டிகளில் அணி சமநிலையில் இருப்பதும் எளிதாகிறது.

3/5
அணியின் மன உறுதி அதிகரிக்கும்
அணியின் மன உறுதி அதிகரிக்கும்

2019 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றார். இத்தகைய சூழ்நிலையில், அவரை மீண்டும் ஒரு வழிகாட்டியாக அணியில் சேர்த்திருப்பது ஒரு சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்திய அணியுடன் தோனி இருப்பது, அணியில் உள்ள வீர்ரகளின் மன உறுதியை அதிகரிக்கும். வீரர்களும் தங்களது முன்னாள் கேப்டனுக்கு வெற்றியை அளிக்க விரும்புவார்கள்.

4/5
தோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்
தோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்

மகேந்திர சிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலமானது. அவர் தனது தனித்துவமான பாணியில் பந்தை வீசுவதில் உலக பிரசித்தி பெற்றவர். அவருக்கு இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை அவரது நண்பர் சந்தோஷ் லால் கற்றுக்கொடுத்ததாக கூறப்படுகிறது. தோனி இந்திய அணியின் வழிகாட்டியாக இருப்பதால், அணியின் பேட்டிங் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.

 

5/5
MS Dhoni: The Perfect Finisher
MS Dhoni: The Perfect Finisher

மகேந்திர சிங் தோனி அணியின் மிக நேர்த்தியான ஃபினிஷர், அதாவது கடைசி வரை நின்று வெற்றி பெற்றுதரும் வீரராக கருதப்படுகிறார். மேட்ச்சின் கடைசி ரன்னை எடுத்து முடிக்கும் வரை, தோனி தளர்வதில்லை என்று ஒரு முறை சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். கடைசி பந்து வரை போராடும் ஆற்றல் அவருக்கு உள்ளது. ஒரு கேப்டனாக, அவர் பல முறை தோற்கவேண்டிய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.





Read More