PHOTOS

எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உடலை உடனே Detox செய்யவும்!

கள் தூய்மை என்பது உடலின் வெளிப்புறத் தூய்மையைப் போலவே முக்கியமானது. உடலில் சேரும் அழுக்குகள் பல கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும். உடல் ...

Advertisement
1/7
டீடாக்ஸ்
டீடாக்ஸ்

உடலில் சேரும் அழுக்குகளை, நச்சுக்களை சுத்தம் செய்வது அவசியம். துரித உணவுகள், போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சமச் சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்ற பல கெட்ட பழக்கங்கள் காரணமாக உடலில் நச்சுக்களும் அழுக்குகளும் சேருகின்றன.

 

2/7

உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுப் பொருட்கள் இருந்தால், உங்கள் உடல் எந்த விதமான சமிக்ஞையை அளிக்கிறது ஆகியவை தொடர்பாக பலரது மனதில் சாந்தேகங்களும் கேள்விகளும் அடிக்கடி எழுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலை  டிடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை  கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்

 

3/7
சரும பிரச்சனை
சரும பிரச்சனை

பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள அழுக்குகளே காரணம். உங்கள் இரத்தம்  தூய்மையாக இல்லை என்றால், தோல் வெடிப்பு, முகப்பரு, புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகள்  ஏற்படுகின்றன. 

4/7
மனநிலை மாற்றங்கள்
மனநிலை மாற்றங்கள்

மனநிலை மாற்றங்கள், எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை போன்ற பிரச்சனைகளை இருந்தாலும் உடலை டீடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். 

5/7
வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம்

வாயிலிருந்து துர்நாற்றம் அல்லது உடல் வியர்வையில் துர்நாற்றம் இருந்தால், உங்கள் உடலில் அதிக அளவில் நச்சுக்கள் அல்லது அழுக்குகள் சேர்ந்து விட்டது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். உங்கள் உடலில் நிறைய நச்சுப் பொருட்கள் சேரும்போது, ​​உங்கள் உடல் வியர்வையில் துர்நாற்றம் வீசப்படுகிறது. அதே நேரத்தில், உங்கள் சுவாசத்திலும் துர்நாற்றம் வீசும்.

6/7
வயிற்று வலி
வயிற்று வலி

வாய்வு தொல்லை, அஜீரணம்மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால் உடலுக்கு டீடாக்ஸ் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் குடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அழுக்கு மற்றும் நச்சுகள் உங்கள் செரிமானத்தை கெடுத்து வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். 

7/7
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.





Read More