PHOTOS

சன்ரைசர்ஸ் அணி கழட்டிவிடப்போகும் இந்த 5 வீரர்கள்... ஐபிஎல் மெகா ஏலத்தில் கழுகாக காத்திருக்கும் மற்ற அணிகள்!

ega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு,இந்தாண்டு இரண்டாம் இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விடுவிக்க வாய்ப்புள்ள ஐந்...

Advertisement
1/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் அணி கடந்த மெகா ஏலத்திற்கு தொடர்ந்து இரண்டு சீசன்கள் மோசமாகவே விளையாடி வந்தது. 2022ஆம் ஆண்டில் 8வது இடத்திலும், 2023ஆம் ஆண்டில் 10வது இடத்திலும் முடித்தது.

 

2/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அந்த வகையில், கடந்த மினி ஏலத்தில் சிறப்பான வீரர்களான பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோரை வாங்கி இந்தாண்டு இறுதிப்போட்டி வரை வந்து கோப்பைக்காக போராடி தோற்றது. 

 

3/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்நிலையில், இந்தாண்டே இந்த அணி பலமாகி இருப்பதால் எந்தெந்த வீரர்கள் அடுத்து வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு விடுவிக்கும் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதில், அந்த அணி விடுவிக்க வாய்ப்புள்ள ஐந்து ஸ்டார் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.

 

4/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

புவனேஷ்வர் குமார்: பல ஆண்டுகளாக இவர் இந்த அணிக்கு விளையாடி வந்தாலும் அவரை விடுவித்துவிட்டு, அவரின் இடத்திற்கு மாற்று வீரரை இறக்க வேண்டிய கட்டாயத்திற்கு எஸ்ஆர்ஹெச் தள்ளப்பட்டுள்ளது. 

 

5/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மார்க்ரம்: 2023 சீசனில் இவரின் தலைமையில்தான் எஸ்ஆர்ஹெச் அணி 10வது இடத்திற்கு வந்தது. இருப்பினும் இவர் SA20 தொடரில் இந்த அணிக்காகவே விளையாடுகிறார் என்றாலும் இவரை ஐபிஎல் அணியில் தக்கவைப்பது சற்று கடினமான ஒன்றுதான். 

 

6/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அப்துல் சமத்: இவரை வளர்த்தெடுத்ததில் இந்த அணிக்கு பெரும் பங்கு உண்டு. இருப்பினும் இவர் இன்னும் அவரின் முழு திறனையும் எந்த முக்கிய போட்டியிலும் வெளிப்படுத்தாத நிலையில் இவரை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

 

7/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

உம்ரான் மாலிக்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் கடந்த இரண்டு சீசன்களாக ஏமாற்றம் அளிக்கும் வீரராக பார்க்கப்பட்டார். எனவே, இவரை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது. 

 

8/8
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கிளன் பிலிப்ஸ்: நியூசிலாந்து வீரரான இந்தாண்டே எஸ்ஆர்ஹெச் பயன்படுத்தவே இல்லை. எனவே, இவரை விடுவிக்கவே அதிக வாய்ப்புள்ளது.





Read More