PHOTOS

புரட்டாசி மாதம் பெருமாளிடம் சரணாகதி அடைந்தால் சூரிய பெயர்ச்சியினால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்!

u : கிரகங்கள் அனைத்தும் நமது வினைகளுக்கு ஏற்ப பலன் தருவதற்காக செயல்படுபவை என்றாலும், இறைவனை சரணாகதி அடைந்தால் வல்வின...

Advertisement
1/14
கன்னிச் சூரியன்
கன்னிச் சூரியன்

செப்டம்பர் 16ம் தேதி சூரியன், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார். குரோதி ஆண்டில் சூரியனின் கன்னி ராசி பெயர்ச்சியானது, புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். புரட்டாசி மாதம் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்

2/14
மீனம்
மீனம்

எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இது, வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வழக்கு விஷயங்கள் உங்கள் பக்கம் இருக்கும்

3/14
கும்பம்
கும்பம்

தொழிலில் கவனம் வேண்டும். நிதானத்துடன் பேசுவது நல்லது. வரவுகள் அதிகரித்தால், அதற்குகேற்ப செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. 

4/14
மகரம்
மகரம்

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் சார்ந்த உதவிகள் செய்ய வேண்டியிருக்கும். பணியிடத்தில் இதுவரை இருந்துவந்த சூழல் மாறும், இது மனதில் புதுவிதமான சிந்தனைகளை உருவாக்கும். உங்கள் மீது இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும்

5/14
தனுசு
தனுசு

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். தனுசு ராசிக்காரரே... எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிப்பது நல்லது தான், ஆனால் அது நிகழ்காலத்தை பாதித்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும்

6/14
விருச்சிகம்
விருச்சிகம்

ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அனுகூலமாய் இருக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொண்டு அறிவியல் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதுவரை இருந்துவந்த இன்னல்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் லாபம் கொடுக்கும். 

7/14
துலாம்
துலாம்

உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணம் தொடர்பான முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். புரட்சிகரமான சிந்தனைகள் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது

8/14
கன்னி
கன்னி

கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பது, கன்னிராசியினருக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். சூரியனின் உற்சாகவும் உத்வேகமும் உங்களுக்குள்ளும் உந்துதல் தரும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும், உங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வரும்

9/14
சிம்மம்
சிம்மம்

உத்தியோகத்தில் இருந்த அலட்சியப்போக்கும் மறையும், இது புதிய வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கும். கடினமான செயல்களை கூட எளிதில் செய்து முடிக்கும் அளவு உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் அனுபவ அறிவு இப்போது அனைவருக்கும் பயன்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நுட்பமான சிந்தனைகள் உங்களின் திறமையை உலகுக்கு அடையாளம் காட்டும்

10/14
கடகம்
கடகம்

அநாவசியமாக வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுப முயற்சிகள் நல்ல பலனைத் தரும், கூட்டாக செயல்படுவதில் ஆர்வம் ஏற்படும்.  பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும், நிதி வரத்து அதிகரிக்கும்

11/14
மிதுனம்
மிதுனம்

ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு கிடைக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும், ஆனால் அதற்கான பட்ஜெட் கையைக் கடிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள், செலவுகளை குறைப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒத்துழைப்பு மேம்படும்

12/14
ரிஷபம்
ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இதுவரை இருந்த அலட்சியப்போக்கு மாறும், வேற்று மொழியின மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், புரட்டாசி மாதம் ரிஷப ராசியினருக்கு நல்ல மாதமாக இருக்கும்

13/14
மேஷம்
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு பெறலாம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் தேவை என்பதையும், அதற்கு சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டியிருக்கும். வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்கள் அதிக செலவை ஏற்படுத்தும்

14/14
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது





Read More