PHOTOS

வீட்டுக் கடனில் இருந்து சீக்கிரம் விடுபட்டு நிம்மதியாக இருக்க... சில எளிய டிப்ஸ்!

கனவாகவும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. ஏனென்றால் சொத்து விலைகள் மிக அதிகமாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்க முடியாத நிலை தா...

Advertisement
1/6
வீட்டு கடன்
வீட்டு கடன்

கல்யாணம் பண்ணிப் பார்... வீட்டை கட்டிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இரண்டும் மிகவும் சவாலான விஷயம் என்பதே அதன் பொருள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்னும் கனவை பூர்த்தி செய்வதில், வீட்டு கடன் ஆபத்பாந்தவனாக உள்ளது என்றால் மிகையில்லை.

2/6
வீட்டு கடன் EMI
வீட்டு கடன்  EMI

வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து விட்டு ஒவ்வொரு மாதமும் EMI செலுத்தும் தொந்தரவிலிருந்து விடுபட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

3/6
வீட்டுக் கடனை ஒரே இடத்தில் வாங்குதல்
வீட்டுக் கடனை ஒரே இடத்தில் வாங்குதல்

ஒரே ஒரு இடத்தில் இருந்து, மொத்த கடனைப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்துவதில் உங்கள்  கவனம் முழுவதையும் திட்டமிட்டு செலுத்துங்கள். எல்லா இடத்திலும் கடன் வாங்கும் போது, அதனை அடைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.

4/6
கடன் EMI தொகை
கடன் EMI தொகை

உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, வீட்டுக் கடன் EMI தொகையை படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்கவும். நீங்கள் அதிக EMI மூலம் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அது உங்கள் நிலுவைத் தொகை வெகுவாகக் குறையும்.

5/6
குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்துதல்
குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்துதல்

கொஞ்சம் பணத்தை அவ்வப்போது முன்கூட்டியே செலுத்துவது உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வீட்டுக் கடனுக்கு முன்பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

6/6
நிலையான வட்டி விகிதம்
நிலையான வட்டி விகிதம்

வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மிகச் சிறந்த வழி, பிளோட்டிங் வட்டி விகிதத்திலிருந்து (floating interest rate) நிலையான வட்டி விகிதத்திற்கு (fixed interest rate) மாறுவதாகும். நிலையான வட்டி விகிதத்திற்கு மாறுவது உங்களுக்கு நிதி லாபத்தை கொடுக்கும்





Read More