PHOTOS

உடல் கொழுப்பு கரைய... இந்த சிம்பிள் ஃபார்முலாவை கடைப்பிடிங்க போதும்!

குறைப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக பலர் கருதுகின்றனர். ஆனால் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு அது கடினமான விஷயம் ஒன்றும் அல்ல. வாழ்க்கையி...

Advertisement
1/9
வாழ்க்கை முறை
வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை: உடல் எடை அதிகரிக்க பிரதானமான காரணமாக இருப்பது நமது வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கம் என்பதை மறுக்க முடியாது. நமது அன்றாட சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடல் கொழுப்பையும் தொப்பையையும் கரைக்க சிறப்பாக உதவும்.

2/9
கடுமையான டயட்
கடுமையான டயட்

கடுமையான டயட்: உடல் எடை குறைய கடுமையான டயட், அல்லது ஜிம் பயிற்சி போன்றவை தேவை கிடையாது. இதனால் பண விரயம் ஏற்படுவதோடு, சில பக்க விளைவுகளும் இருக்கலாம். அதனால், சில வாழ்க்கை முறை மாற்றங்களை, பக்க விளைவுகள் அற்ற சீரான உடல் எடை இழப்பிற்கு உதவும்.

3/9
சாப்பிடும் பழக்கம்
சாப்பிடும் பழக்கம்

சாப்பிடும் பழக்கம்: முதலில் அவசரப்படாமல் மெதுவாக சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிடும் போது, சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் நன்றாக கலந்து, ஜீரணம் எளிதாகிறது. உடல் எடை குறைய செரிமான சக்தி சிறப்பாக இருப்பது மிக மிக முக்கியம்.

 

4/9
சுறுசுறுப்பாக இருத்தல்
சுறுசுறுப்பாக இருத்தல்

சுறுசுறுப்பாக இருத்தல்: உடல் எடை குறைய கடுமையான, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களால் முடிந்த எளிமையான பயிற்சிகள் போதும். நடைப்பயிற்சியும் நல்ல பலன்களைக் கொடுக்கும். இவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், லிஃப்ட் போன்றவற்றை பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் ஏறுவதும் பலன் கொடுக்கும்.

 

5/9
உணவுப் பழக்கம்
உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்: நாம் உணவை சாப்பிடும் போது குறைவான அளவில், குறைந்த இடைவெளியில் சாப்பிடுவது நல்லது. அதாவது காலை மாலை இரவு என, மூன்று வேளை உண்பதற்கு பதிலாக, குறைந்த இடைவெளியில், அடிக்கடி சிறிதளவு உணவு எடுத்துக் கொள்வது உடல் எடை குறைய உதவும். பசியும் கட்டுக்குள் இருக்கும்.

6/9
தண்ணீர்
தண்ணீர்

தண்ணீர்: எடை குறைய உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் செரிமானம் சிறப்பாக இருக்கும். சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான நீர் குடிப்பது, செரிமானத்தை விரைவுபடுத்தி உடல் எடை குறைய உதவும்.

 

7/9
நல்ல தூக்கம்
நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்: உணவைப்போன்றே உடல் எடை குறைய நல்ல தூக்கம் மிகவும் அவசியம். ஏனெனில் தூக்கமின்மை காரணமாக பசியை ஏற்படுத்தும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் மாற்றங்கள் உண்டாகும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே குறைந்தது 7 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

8/9
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு: நாம் உண்ணும் உணவு சமச்சீரான உணவாக இருக்க வேண்டும். அதில் புரதச்சத்து முதல் கொழுப்பு வரை அனைத்தும் தேவை. எனவே, இந்த உணவு வேண்டாம் அந்த உணவு வேண்டாம் என விளக்காமல், அனைத்தையும் அளவோடு சேர்த்துக் கொண்டு வளமோடு வாழலாம்.

9/9
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.





Read More