PHOTOS

In Pics: ஸ்பெயினின் கேனரி தீவுகளில் கொழுந்து விட்டு எரியும் எரிமலை..!!

மலை வெடித்ததால் பல வீடுகள் எரிந்து விட்டதாக அரசு அதிகாரிகள் கூறினர். ஆயிரக்கணக்கா...

Advertisement
1/5
கும்ப்ரே வீஜா மலையில் எரிமலை
கும்ப்ரே வீஜா மலையில் எரிமலை

கானரி தீவான லா பால்மாவில் உள்ள லாஸ் லானோஸ் டி அரிடேனில் இருந்து பார்க்கும் போது, கும்ப்ரே வீஜா மலையில் கொழுந்து விட்டு எரியும் எரிமலை, புகை, சாம்பல் ஆகியவற்றை காணலாம். (புகைப்படம்: AFP)

 

2/5
1971 ஆம் ஆண்டில் வெடித்த எரிமலை
1971 ஆம் ஆண்டில் வெடித்த எரிமலை

கேனரி தீவுகள் எரிமலை ஆய்வு நிறுவனம், தீவின் தெற்கு முனை அகுகே பிற்பகல் 3 மணிக்குப் பிறகு எரிமலை வெடித்ததாக அறிவித்தது, இதற்கு முன்னதாக 1971 ஆம் ஆண்டில்  கடைசியாக எரிமலை வெடித்ததாக கூறப்படுகிறது. (புகைப்படம்: AFP)

 

3/5
ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்
ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்

85,000 மக்கள்தொகை கொண்ட லா பால்மா, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள எட்டி எரிமலை தீவுகளில் ஒன்றாகும். ஸ்பெயினின் கேனரி தீவுகள் தீவில் உள்ள எட்டு எரிமலைத் தீவுகளில் ஒன்றான இதில், பாதுகாப்பிற்காக அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

(புகைப்படம்: AFP)

4/5
எரிமலைக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம்
எரிமலைக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம்

எரிமலைக்கு முன் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்பதிவு செய்யப்பட்டது.  கபேசா டி வக்கா எனப்படும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எரிமலை குழம்புகள் எல் பாரைசோ, அல்கலா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள நகராட்சிகளை வந்தடையும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

(புகைப்படம்: AFP)

5/5
சான்செஸ் கேனரி தீவிற்கு செல்ல உள்ள பிரதமர்
சான்செஸ் கேனரி தீவிற்கு செல்ல உள்ள பிரதமர்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதி[ப்பை லா பால்மாவுக்கு சென்று ஆராய, ஐ.நா பொதுச்சபைக்காக நியூயார்க் செல்லும் பயணத்தை ஒத்திவைத்தார்.

(புகைப்படம்: AFP)





Read More