PHOTOS

குரு நட்சத்திரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி.. இன்னும் 29 நாட்களில் இந்த ராசிகளின் காட்டுல பண மழை, ராஜ வாழ்க்கை

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்...

Advertisement
1/7
சனி பகவான்
சனி பகவான்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பலவான். இவர் நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன் தரக்கூடியவர். சனி பகவான் நவக்கிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

2/7
சனி நட்சத்திர பெயர்ச்சி
சனி நட்சத்திர பெயர்ச்சி

வருகிற ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் அதாவது குருவின் அதிபதி நட்சத்திரத்தில் செல்லவுள்ளார். சனி பகவான் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அனைத்து ராசிகளிலுமே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் சுபமாகவே தெரியும்.

 

3/7
ராசிகளில் தாக்கம்
ராசிகளில் தாக்கம்

சனி நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதனுடன் நல்ல பண வரவு, வேலையில் ப்ரமோஷன், சம்பள உயர்வு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எனவே சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும் என்று பார்ப்போம்.

 

4/7
மேஷம்
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் லாபகரமான பலனைத் தரும். நிதி நிலை மேம்படும், இதனால் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தியைப் பெறலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய முதலீடு மூலம் நல்ல லாபம் பெறலாம்.

5/7
ரிஷபம்
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கலாம். 

6/7
மிதுனம்
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் மங்களம் உண்டாகும். ஏப்ரல் முதல் அதிர்ஷ்டம் பெருகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி மழை கொட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை மாணவர்கள் பெறலாம்.

7/7
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.





Read More