PHOTOS

ஒன்றாக வியட்நாம் விடுமுறைக்கு சென்ற ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா?

Mandanna In Vietnam: தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அதே போல, நடிகர் விஜய் தே...

Advertisement
1/7
Rashmika Mandanna And Vijay Deverakonda Relationship
Rashmika Mandanna And Vijay Deverakonda Relationship

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்களாக விளங்குபவர்கள், ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும் டியர் காமரேட் மற்றும் கீதா கோவிந்தம் உள்பட இரண்டு படங்களில் நடித்துள்ளனர். ஆன் ஸ்கீரீனில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போக, இவர்கள் உண்மையாகவே காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? 

2/7
Vijay Deverakonda
Vijay Deverakonda

விஜய் தேவரகொண்டா, தெலுங்கு மட்டுமன்றி இந்திய அளவில் அர்ஜுன் ரெட்டி படத்தால் அறியப்பட்டார். தமிழில், நோட்டா என்ற படத்திலும் நடித்தார். விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஓரளவு ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. 

3/7
Vijay Deverakonda
Vijay Deverakonda

விஜய் தேவரகொண்டா அடுத்து ஃபேமிலி ஸ்டார் என்ற படத்திலும் அவரது 12வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி இவருக்கும் ராஷ்மிகா மந்தனாவிர்குமான காதலை உறுதிப்படுத்தியுள்ளது. 

4/7
Rashmika Mandanna
Rashmika Mandanna

வாரிசு பட நடிகை ராஷ்மிகா, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பல கோடி வசூல் செய்து வெற்றி பெற்றதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வியட்நாம் நாட்டிற்கு வெகேஷன் சென்றார். 

5/7
Rashmika Mandanna
Rashmika Mandanna

வியட்நாமிற்கு சென்ற போது, ராஷ்மிகா தலையில் அந்த நாட்டில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தொப்பிகளை தலையில் போட்டு போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இவரது புகைப்படம் போலவே விஜய் தேவரகொண்டாவும் வெளிநாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. 

6/7
Rashmika Mandanna
Rashmika Mandanna

இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு செல்வதென்றால் ஒன்றாகத்தான் பயணிப்பதாகவும் சில தகவல்கள் பரவுவது வழக்கம். அந்த வ்கையில், இவர்கள் இருவரும் மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது போல ஏற்கனவே ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர். 

7/7
Rashmika Mandanna
Rashmika Mandanna

சில நாட்களுக்கு முன்னர், ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகலவ்கள் பரவியது. ஆனால் இதை இரு தரப்பினரும் மறுத்துவிட்டனர். தற்போது இவர்கள் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்கள் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டாவின் காதலை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டனர். 





Read More