PHOTOS

கருவேலமரம் பட்டையை எப்படி பயன்படுத்தினால் ‘இந்த’ உடல் கோளாறுகள் சரியாகும்?

Babul bark: கருவேலம் மரப் பட்டை பற்களுக்கு ஒரு நல்ல ஆயுர்வேத மருந்து. பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பல்வலி, ஈறுகளில் இரத...

Advertisement
1/8

ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களில் ஒன்று கருவேல மரம்.  வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாக இருக்கும் சீமை கருவேலமரத்தின் பட்டை, பூக்கள் மற்றும் இலைகள் என அனைத்து பாகங்களும் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது 

2/8
பற்களின் ஆரோக்கியத்திற்கு கருவேலம் பட்டை
பற்களின் ஆரோக்கியத்திற்கு கருவேலம் பட்டை

பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பல்வலி, ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு அகாசியா பட்டை மிகவும் நல்லது. பல்வலியில் இருந்து நிவாரணம் பெற, இதன் இலைகள், பூக்கள் மற்றும் காய்களுடன் கருவேல மரப் பட்டையின் தூளையும் பயன்படுத்தலாம்.

3/8
இருமலில் இருந்து நிவாரணம்
இருமலில் இருந்து நிவாரணம்

இருமல் தொல்லை இருந்தால், கருவேலம் பட்டை பொடியை உட்கொள்ளலாம். இருமலுக்கு 1 அல்லது 3 கிராம் கருவேலம் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4/8
உடல் உஷ்ணத்தை போக்கும் கருவேலம்பட்டை
உடல் உஷ்ணத்தை போக்கும் கருவேலம்பட்டை

உடலில் வெப்பம் காரணமாக எரிச்சல் ஏற்பட்டால், கருவேலம் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருவேலம் பட்டையை கசாயமாக தயாரித்துக் குடித்தால், உடல் சூடு குறையும். உடல் உஷ்ணத்தை போக்கும் கருவேலம்பட்டை பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டது.

5/8
கருவேலம்பட்டை பேஸ்ட்
கருவேலம்பட்டை பேஸ்ட்

கருவேலம்பட்டையை அரைத்து அதை சருமத்தில் பூசி, சிறிது நேரம் காயவிட்டு குளித்து வந்தால், சருமம் பொலிவு பெறும், சருமப்பிரச்சனைகள், அலர்ஜி போன்றவை சரியாகும்

6/8
கருவேலம்பட்டை நீர்
கருவேலம்பட்டை நீர்

கருவேலம்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து வாயை கொப்பளித்து வந்தால், பற்களின் ஈறுகள் பலப்படும், பல்வலி, சொத்தை என எந்த பிரச்சனையும் இருக்காது

7/8
ஆயுர்வேதம்
ஆயுர்வேதம்

பொறுப்புத் துறப்பு: ஆயுர்வேதத்தில் கருவேலம் மரத்தின் நன்மைகள் குறிப்பிட்டு சொல்லப்படுகின்றன. அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

8/8




Read More