PHOTOS

SBI அளிக்கும் அற்புத வசதி: உங்கள் செக் புக் உங்கள் வீடு தேடி வரும், இப்படி ஆர்டர் செய்யவும்

: வங்கி தொடர்பான செயல்பாடுகளின் எண்ணிக்கையில் காசோலை புத்தகம், அதாவது Cheque Book மிகவும் முக்கியமானது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்கள...

Advertisement
1/5
காசோலை புத்தகத்துக்கான கோரிக்கையை ஆன்லைனில் சரிபார்க்கவும்
காசோலை புத்தகத்துக்கான கோரிக்கையை ஆன்லைனில் சரிபார்க்கவும்

நீங்கள் காசோலை புத்தகத்துக்கான கோரிக்கையை ஆன்லைனில் வைக்கலாம். உங்கள் சேமிப்பு, நடப்பு இருப்பு, கேஷ் கிரெடிட் மற்றும் ஓவர்டிராஃப்ட் போன்ற அனைத்து கணக்குகளுக்கும் காசோலை புத்தகத்தை கோரலாம்.

2/5
25, 50 அல்லது 100 எஸ்பிஐ காசோலை பக்கங்கள் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு
25, 50 அல்லது 100 எஸ்பிஐ காசோலை பக்கங்கள் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு

நீங்கள் 25, 50 அல்லது 100 காசோலை பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகங்களைத் தேர்வு செய்யலாம். நீங்கள் அவற்றை கிளையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம், அல்லது, உங்கள் கிளையிடம் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்புமாறு கோரலாம்.

3/5
மாற்று முகவரியையும் பயன்படுத்தலாம்
மாற்று முகவரியையும் பயன்படுத்தலாம்

உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியில் காசோலை புத்தகத்தை நீங்கள் பெறலாம். அல்லது காசோலை புத்தகத்தை பெற்றுக்கொள்ள மாற்று முகவரியையும் வழங்கலாம்.

4/5
எஸ்பிஐ காசோலை புத்தகம் அனுப்பும் நேரம்
எஸ்பிஐ காசோலை புத்தகம் அனுப்பும் நேரம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொள்கையின் படி, கோரிக்கை தேதியிலிருந்து 3 வேலை நாட்களுக்குள் வங்கி காசோலை புத்தகங்கள் அனுப்பப்படும்.

5/5
ஆன்லைனில் எஸ்பிஐ காசோலை புத்தகத்திற்கு இப்படி விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் எஸ்பிஐ காசோலை புத்தகத்திற்கு இப்படி விண்ணப்பிக்கலாம்

* வங்கி வலைத்தளத்தின் ரீடெயில் பிரிவில் உள் நுழையவும்.

* ‘Requests tab’-ன் கீழ் உள்ள காசோலை புத்தக இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அனைத்து பரிவர்த்தனை கணக்குகளையும் நீங்கள் இங்கே காணலாம்.

* உங்களுக்கு காசோலை புத்தகம் தேவைப்படும் கணக்கைத் தேர்ந்தெடுத்து, தேவையான காசோலை பக்கங்களின் எண்ணிக்கையையும் விநியோக முறையையும் உள்ளிடவும். பின்னர், அதை சமர்ப்பிக்கவும்.





Read More