PHOTOS

Health News: வாழைப்பழம் வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் தெரியுமா?

டம் உட்கொள்ளும் ஒரு பழமாகும். வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு பழம். வாழைப்பழத்தில் பல நன்மைகள் உள்ளன. அனத்து வயதினரும் இதை தி...

Advertisement
1/5
பழத்தின் வண்ணத்தில் கவனம் செலுத்துங்கள்
பழத்தின் வண்ணத்தில் கவனம் செலுத்துங்கள்

நீங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பழங்களை வைத்து பயன்படுத்தும் எண்ணத்தில் இருந்தால், முற்றிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பழங்களை வாங்குவது சிறந்தது. அதில் கருப்பு புள்ளிகள் அல்லது கருப்பு அடையாளங்கள் இருக்கும் பழங்களை வாங்க வெண்டாம். அவை இரு நாட்களுக்குள் கெட்டு விடக்கூடும். ஆப்பிள் ஆரஞ்சு பழங்களைப்போல இவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதில்லை.

 

2/5
பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளுங்கள்
பயன்பாட்டிற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளுங்கள்

நீங்கள் எந்த நோக்கத்திற்காக வாழைப்பழங்களை வாங்குகிறீர்கள் அல்லது ஒரு நாளில் எத்தனை வாழைப்பழங்கள் உங்களுக்குத் தேவை என்பதற்கு ஏற்ப பழங்களை வாங்குங்கள். உதாரணமாக, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழைப்பழ ஷேக் செய்யும் யோசனை இருந்தால் அதிகமான வாழைப்பழங்களை வாங்க வேண்டியிருக்கும். தினமும் ஒருவர் மட்டுமே சாப்பிட வாங்க வேண்டுமானால் அளவோடு வாங்கிக் கொள்ளலாம்.

3/5
வாழைப்பழங்களின் அளவும் முக்கியம்
வாழைப்பழங்களின் அளவும் முக்கியம்

பெரிய மற்றும் தடிமனான வாழைப்பழங்களை வாங்குவது சிறந்தது. இத்தகைய வாழைப்பழங்கள் முழுமையாக பழுத்தவையாக இருக்கும். இது அவற்றின் சுவையை அதிகரிக்கும். சில சிறிய வாழைப்பழங்கள் உள்ளே பழுக்காமல் பச்சையாக இருக்கலாம். இவை வயிற்றுப் பிரச்சினையையும் ஏற்படுத்தும்.

4/5
வாழைப்பழத் தோலில் கவனம் தேவை
வாழைப்பழத் தோலில் கவனம் தேவை

வாழைப்பழத் தோல் ஆங்காங்கே பச்சை நிறமாக இருந்தால், அவை முழுமையாக பழுக்கவில்லை என்று அர்த்தம். இன்று வாங்கி மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு சாப்பிட இவை ஏற்றதாக இருக்கும். ஆனால் அன்றே சாப்பிட இவை உகந்ததாக இருக்காது. இவற்றால் உடல் நலக் கோளாறு ஏற்படலாம்.

5/5
விலையைப் பார்க்காமல் தரத்தையும் தேவையையும் பார்த்து வாங்கவும்
விலையைப் பார்க்காமல் தரத்தையும் தேவையையும் பார்த்து வாங்கவும்

வாழைப்பாங்கள் சில சமயங்களில் மிக மலிவாகக் கிடைப்பதால், பலர் அதிக அளவில் வாங்கி விடுகிறார்கள். வாங்கி விட்டதால் அதிக அளவில் உண்ண முடியாது. அப்படி செய்தால் பிரச்சனை ஏற்படலாம். ஆகையால், இவற்றை வாங்கும்போது விலையைப் பார்க்காமல், தேவையையும் தரத்தையும் பார்த்து வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். 





Read More