PHOTOS

எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தா முள்ளங்கியிடம் இருந்து விலகியே இருங்க!

த்திற்கு மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. முள்ளங்கி பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.  இர...

Advertisement
1/6

முள்ளங்கியில் ஆரோக்கிய நலன்கள் நிறைந்துள்ளன, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல உடல நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், சில நோய்கள் இருப்பவர்கள் முள்ளங்கியை உட்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், குறிப்பிட்ட நோயாளிகளின் உடல்நிலை மோசமடையக்கூடும். எந்தெந்த நோய்களில் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.

2/6
தைராய்டு
தைராய்டு

தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது , ஏனெனில் இதனை அதிகம் சாப்பிடுவதால் உடலில் உள்ள ஹார்மோன்கள் எதிர்மறையாக அதிகரிக்க மற்றும் குறையத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில்,  முள்ளங்கி சாப்பிட விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரை ஒரு முறை அணுகி ஆலோசனை பெறவும்.

3/6
நீரிழப்பு நோயாளிகள்
நீரிழப்பு நோயாளிகள்

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்கள் அல்லது நீரிழப்பு பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியை சாப்பிடக்கூடாது. இதைச் செய்வதன் மூலம், உடலில் அதிக சிறுநீர் வெளியேறும், இதனால் உடலில் ஏற்கனவே குறைவாக உள்ள நீர்சத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

 

4/6
இரத்தச் சர்க்கரை
இரத்தச் சர்க்கரை

இரத்தச் சர்க்கரைக் குறைவு பிரச்சனை உள்ளவர்கள், முள்ளங்கியை அளவிற்கு அதிகமாக் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதை உண்பது அவர்களின் இரத்த சர்க்கரை பிரச்சனையை அதிகரிக்கும். இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

5/6
குறைந்த இரத்த அழுத்தம்
குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் முள்ளங்கி தவிர்ப்பது நல்லது. இது அவர்களின் இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கிறது, இதன் காரணமாக இரத்த ஓட்டத்தில் பல வகையான பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கலாம்.

6/6




Read More