PHOTOS

குழந்தை வளர்ப்பு... பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய ‘சில’ முக்கிய விஷயங்கள்.!

ிறப்பாக வளர்க்க,  தாயும் தந்தையும் இணைந்து குழந்தை வளர்ப்பில் முழு பங்களிப்பை வழங்க வேண்டும். அதனால் குழந்தைகள் நல்ல சூழலில் வளர்வ...

Advertisement
1/8
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதல்
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதல்

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதல்: குழந்தையுடன் முழுமையாக நேரத்தை செலவிடுவது முக்கியம். குறிப்பாக அம்மா வேலை செய்யும் சமயங்களில், குழந்தையுடன் தொடர்ந்து ஈடுபடுவது, அவருக்கு உணவளிப்பது, கற்பிப்பது மற்றும் அவர்ருடன் பேசுவது தந்தையின் பொறுப்பு. அதனால் குழந்தைக்கு, தந்தையுடனான பந்தமும் அதிகரிக்கிறது. 

2/8
மனைவியை அவமரியாதை செய்யாதீர்கள்
மனைவியை அவமரியாதை செய்யாதீர்கள்

மனைவியை அவமரியாதை செய்யாதீர்கள்: உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியை அவமரியாதை செய்வது அல்லது உரையாடலை குறுக்கிட்டு அவள் செய்வது தவறு என கூறுவது சரியானதல்ல. இதனால், குழந்தைகள் அமாவின் பேச்சைக் கேட்காமல் போகும் வாய்ப்பு உண்டு.

3/8
பெற்றோர்கள் பரஸ்பரம் சண்டையிடுதல்
பெற்றோர்கள் பரஸ்பரம் சண்டையிடுதல்

பெற்றோர்கள் பரஸ்பரம் சண்டையிடுதல்: பெற்றோர்கள் பரஸ்பரம் சண்டையிடுதல்  வளரும் குழந்தையின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தையின் முன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், மாறாக நீங்கள் தனியாக இருக்கும் போது பரஸ்பர கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

4/8
ஒன்றாக இரவு உணவு அருந்துதல்
ஒன்றாக இரவு உணவு அருந்துதல்

ஒன்றாக இரவு உணவு அருந்துதல்: இரவு உணவிற்கு முழு குடும்பத்தினர் சேர்ந்து உட்கார்ந்து உணவு உட்கொள்ளுங்கள். இந்த நேரத்தில், குழந்தையுடன் பேசவும்.  இதன் மூலம் குழந்தை தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொள்கிறார். தயக்கமின்றி அனைவருக்கும் முன்னால் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

5/8
குழந்தைகள் மனதை குழப்பக் கூடாது
குழந்தைகள் மனதை குழப்பக் கூடாது

குழந்தைகள் மனதை குழப்பக் கூடாது: பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் ஒரே விதத்தில் பேச வேண்டும். குழந்தையின் முன் ஒருங்கிணைந்த மனதை வெளிக்காட்ட வேண்டும். பரஸ்பரம் குறுக்கிட்டு பேசுவது குழந்தையை குழப்பமடையச் செய்வது மட்டுமல்லாமல், அவரது மனதில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

6/8
குழந்தை செய்யும் செலவு
குழந்தை செய்யும்  செலவு

குழந்தை செய்யும்  செலவு: பெரும்பாலும் அப்பா குழந்தைகளுக்காகச் சிந்திக்காமல் பணத்தைச் செலவு செய்கிறார்.  எனவே செலவுகளுக்கு அம்மாவிடம் சம்மதம் வாங்கும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்தினால் மட்டுமே குழந்தை பணத்தை செலவழிக்கும் முன் கண்டிப்பாக யோசித்து, பட்ஜெட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளும்.

 

7/8
தவறை ஒப்புக் கொள்ளும் குணம்
தவறை ஒப்புக் கொள்ளும் குணம்

தவறை ஒப்புக் கொள்ளும் குணம்: நீங்கள் ஏதேனும் தவறிழைத்தால், அதற்காக மன்னிப்பு கேட்க தவறாதீர்கள். இதன் மூலம் குழந்தைப் பருவத்திலிருந்தே தன் தவறை ஒப்புக்கொள்ளவும், யாரேனும் ஒருவரின் மனதை புண்படுத்தும் போது   மன்னிப்பு கேட்கவும், கற்றுக் கொள்ளும். 

8/8
குழந்தை வளர்ப்பு டிப்ஸ்
குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்: குழந்தைகள் அறிவாளிகளாக வளரும் அதே சமயத்தில் கண்ணியமானவர்களாகவும் வளர மேலே கூறப்பட்ட அறிவுரைகளை பின்பற்றுவது பலன் கொடுக்கும்.





Read More