PHOTOS

Onion Combo: வினிகருடன் கூட்டு வைக்கும் வெங்காயம்: ஆரோக்கியத்திற்கு நன்மையா? தீமையா?

/strong>: வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது, ஆனால் அதை சரியான முறையில் சாப்பிடுவது எப்படி என்பதும் தெரிந்திருக்க வேண்டும். ...

Advertisement
1/6
வெங்காயத்தை எப்படி சாப்பிட வேண்டும்
வெங்காயத்தை எப்படி சாப்பிட வேண்டும்

வெங்காயத்தை எப்படி சாப்பிட வேண்டும்?  வினிகருடன் தண்ணீரை கலந்து அதில் உப்பு சேர்க்கவும். வெங்காயத்தை நடுவில் இருந்து வெட்டிய பிறகு அதை வினிகர் கலவையில் சேர்க்கவும். இது, சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

2/6
இதய பராமரிப்பு
இதய பராமரிப்பு

வெங்காயத்தை வினிகருடன் சேர்த்து சாப்பிடுவது இதயத்திற்கு நன்மை பயக்கும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. இதில் வைட்டமின் பி9 மற்றும் ஃபோலேட் உள்ளது, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

3/6
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வெங்காயம்
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வெங்காயம்

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் வெங்காயம் ஒரு ஆராய்ச்சியின் படி, வெங்காயத்தை வினிகரில் சேர்த்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. புரோஸ்டேட், மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது வினிகர் வெங்காயம்.

4/6
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி

நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரிக்க விரும்பினால், வெங்காயத்தை வினிகருடன் சேர்த்து சாப்பிடலாம். சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் விரைவில் பாதிக்காமல் இந்த வெங்காயம் காக்கும்.  

5/6
செரிமானத்திற்கு நன்மை பயக்கும்
செரிமானத்திற்கு நன்மை பயக்கும்

வினிகருடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதால், செரிமானம் மேம்படும். இந்த வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

6/6
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வினிகருடன் வெங்காயம் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். வெங்காயத்தை வினிகருடன் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.  





Read More