PHOTOS

தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்

ice: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பீட்ரூட் மிக அவசியம் என்று உணவு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால...

Advertisement
1/9
பீட்ரூட் ஊட்டச்சத்துக்கள்
பீட்ரூட் ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட் ஊட்டச்சத்துக்கள்: இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜன் ஏற்றம் நிறைந்த பீட்ரூட், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. கூடுதலாக குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது.

 

2/9
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம்

தினமும் பீட்ரூட் சாறு அருந்துபவர்கள் இரத்த அழுத்தம் சிறப்பாக கட்டுக்குள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் நைட்ரேட்டுகள் இதில் அதிகம் உள்ளன. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் பெரிதளவு குறைகிறது.

 

3/9
இரத்த சர்க்கரை அளவு
இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு: இன்சுலின் அளவை சுரக்கச் செய்யும், பாலிசினால்கள், நைட்ரேட் இருப்பதால்  நீரழிவு நோயாளிகளுக்கு இது அருமருந்தாக இருக்கும். தினமும்ம் அருந்துவதால், சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.

 

4/9
உடல் பருமன்
உடல் பருமன்

உடல் பருமன்: பீட்ரூட் மிக குறைவான கலோரி கொண்ட, ஊட்டச்சத்து நிறைந்த உணவு. எனவே, எடையைக் குறைப்பதற்கான டயட்டின்  ஒரு முக்கிய அங்கமாக பீட்ரூட் இருக்க வேண்டும்.

5/9
மூளை ஆரோக்கியம்
மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்: இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் பீட்ரூட்டிற்கு உண்டு, இதனால் மூளைக்கான ரத்தஓட்டம் சீராகி, நால் முழுவதும் மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

 

6/9
மலச்சிக்கல்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்: அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறி என்பதால், செரிமானத்தை சீராக்கி, மலசிக்கல் பிரச்சனை நீங்க உதவுகிறது.

7/9
புற்றுநோய்
புற்றுநோய்

புற்றுநோய்: பீட்ரூட் சாற்றில் உள்ள பீட்டாலைன் என்ற உயிர்வேதியியல் கூறு,  சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. ஆக்ஸிஜனேற்ற ஆற்றல் இதற்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

8/9
இரத்தசோகை
இரத்தசோகை

இரத்தசோகை: இரும்பு சத்து நிறைந்த பீட்ரூட், ரத்தத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கப்பதோடு, ஹீமோகுளோபிள் அலவை அதிகரித்து, ரத்தசோகை நோயை குணமாக்கும்.

 

9/9
பொறுப்பு துறப்பு
பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.





Read More