PHOTOS

ஜூலை மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பண வரவு... முழு ராசிபலன் இதோ

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 9 கிரகங்களில் சிலவற்றைத் தவிர, மற்ற அனைத்து கிரகங்களும் ஒவ...

Advertisement
1/11
ஜூலை மாத ராசிபலன்: சந்திரன், சூரியம், செவ்வாய் ராசி மாற்றம்
ஜூலை மாத ராசிபலன்: சந்திரன், சூரியம், செவ்வாய் ராசி மாற்றம்

சந்திரன், சூரியம், செவ்வாய் ராசி மாற்றம்: சந்திரன் சுமார் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும். சூரியன் ஜூலை 16ம் தேதி கடக ராசிக்கு மாறுகிறார். ஜூலை 01-ம் தேதி, தைரியம் மற்றும் துணிச்சலுக்கு காரணியாக கருதப்படும் செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார்.

2/11
ஜூலை மாத ராசிபலன்: அதிர்ஷ்டசாலி ராசிகள்
ஜூலை மாத ராசிபலன்: அதிர்ஷ்டசாலி ராசிகள்

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்: ஜூலை மாத கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்

3/11
ஜூலை மாத ராசிபலன்: ரிஷபம்
ஜூலை மாத ராசிபலன்: ரிஷபம்

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-ரிஷபம்: திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்தால் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடனான உறவுகள் நன்மைகளைத் தரும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நேரம் இது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

4/11
ஜூலை மாத ராசிபலன்: மிதுனம்
ஜூலை மாத ராசிபலன்: மிதுனம்

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-மிதுனம்: வியாபாரம் நன்றாக நடக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். சுப மற்றும் சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

5/11
ஜூலை மாத ராசிபலன்: தனுசு
ஜூலை மாத ராசிபலன்: தனுசு

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-தனுசு: அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நிதி ரீதியாகவும் ஸ்திரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்ட தெய்வம் கதவைத் தட்ட வாய்ப்புள்ளது.

6/11
ஜூலை மாத ராசிபலன்: கும்பம்
ஜூலை மாத ராசிபலன்: கும்பம்

ஜூலை அதிர்ஷ்டசாலி ராசிகள்-கும்பம்: தடைபட்டிருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். 

7/11
ஜூலை மாத ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்
ஜூலை மாத ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்

ஜூலையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்: ஜூலை மாத கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள், மன அமைதியின்மை ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி பார்க்கலாம்.

8/11
ஜூலை மாத ராசிபலன்: மேஷம்
ஜூலை மாத ராசிபலன்: மேஷம்

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்-மேஷம்: இவர்களுக்கு எடுத்த காரியத்தில் எல்லாம் தடைகள் ஏற்படும். ஒரு வேலையை முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். மன சோர்வு காணப்படும். 

9/11
ஜூலை மாத ராசிபலன்: கன்னி
ஜூலை மாத ராசிபலன்: கன்னி

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்-கன்னி: உறவினர்களுடன் மன கசப்பு ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. நம்பிய நண்பர்கள் வேண்டிய நேரத்தில் கைவிடக்கூடும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்.

10/11
ஜூலை மாத ராசிபலன்: துலாம்
ஜூலை மாத ராசிபலன்: துலாம்

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்-துலாம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கை, கால்களின் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். அலைச்சல் இருக்கும். பணிகள் முடிய நேரம் எடுக்கும்.

11/11
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 





Read More