PHOTOS

அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தென் இந்திய நடிகைகள் - முதலிடத்தில் யார்?

Highest Paid South Indian Actresses: அதிக சம்பளம் வாங்கும் முதல் ஐந்து தென் இந்திய நடிகைகளின் பற்றி அறிந்துக்கொள்க.

...
Advertisement
1/5
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திரையுலகில் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நடித்து வருகிறார். அழகு மற்றும் திறமையான நடிகையான  நயன்தாரா (வயது 37) தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என பல படங்களில் பணியாற்றியுள்ளார். அடுத்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. ஒவ்வொரு படத்திற்கும் நயன்தாரா ரூ.5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ETimes இன் படி, அவர் தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

2/5
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே 2012 ஆம் ஆண்டு தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகின் உழ்ழ`உச்ச நடிகர்களுடன் நடித்து வருகிறார். பாலிவுட்டில் 'சர்க்கஸ்' மற்றும் 'கபி ஈத் கபி தீபாவளி' போன்ற இந்தி படங்களில் நடிக்கிறார். ஜன கண மன என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.3.5-5 கோடி சம்பளம் வாங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

3/5
சமந்தா ரூத் பிரபு
சமந்தா ரூத் பிரபு

அழகான முகமாக மட்டுமல்லாமல், திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தை தன்பக்கம் திருப்பியவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தனது நடிப்பு மாயாஜாலத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 'தி ஃபேமிலி மேன் 2' என்ற வெப் தொடரில் தனது நடிப்பு மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களை வென்றவர். ஒரு படத்திற்கு சமந்தா 3.5-4 கோடி ரூபாய்  சம்பளம் வாங்குவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4/5
தமன்னா பாட்டியா
தமன்னா பாட்டியா

இந்தப் பட்டியலில் தமன்னா பாட்டியாவின் பெயர் நான்காவது இடத்தில் உள்ளது. அவர் நீண்ட காலத்திற்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அவரது படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன்பிறகு, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திய தமன்னா, வசூலை வாரி குவித்த 'பாகுபலி' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தில் வந்தார். ஊடக அறிக்கையின்படி, அவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் 2.5-5 கோடி ரூபாய் சம்பவம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

5/5
ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

5வது இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார். விரைவில் பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ‘மிஷன் மஜ்னு’ படத்தில் அறிமுகமாகிறார். இவர் ஒவ்வொரு படத்துக்கும் ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





Read More